தைரியம் இருந்தா கை வைச்சு பாரு.. யூடியூபர் மாரிதாஸூக்கு தி.மு.க எம்.பி செந்தில்குமார் சவால்

மாரிதாஸ்

கிஷோர் கே சாமி கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் அரசியல் விமர்சகர் கிஷோர் கே.சாமி, இவர் தி.மு.க-வுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தும், அக்கட்சியின் தலைவர்களையும் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்து வந்தார்.

  இதுதொடர்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக கிஷோர் கே.சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கிஷோர் கே. சாமி கைது செய்யப்பட்டார்.

   


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து யூடியூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “தி.மு.க நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் தி.மு.க ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார்.சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி.” எனப் பதிவிட்டுள்ளார்.  இந்த பதிவுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், ‘ தைரியம் இருந்தா கை வைச்சு பாரு... நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும். பி கு: உள்ளே போகும் போது மறக்காம போர்டை எடுத்துட்டு போகவும்”எனப் பதிவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: