Home /News /tamil-nadu /

யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது!

யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது!

மதமோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் யூட்யூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதமோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் யூட்யூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதமோதலை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் யூட்யூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட்டதாக, யூட்யூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    2020ம் ஆண்டு காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295A, 505 (2), தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67, என நான்கு பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யபட்டிருந்தது.

    இந்நிலையில், இன்று அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். முன்னதாக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, தமிழ்நாடு அரசு குறித்து தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காகவும், வன்முறையை தூண்டியதற்காகவும் மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.

    இந்நிலையில், கைதை எதிர்த்து மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், காவல் துறையினர் உரிய முறையில் ஆவணமாக பதிவு செய்யாமல், வீடியோவை மட்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறி வழக்கை ரத்து செய்தார்.

    Also read: நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’ என்று எழுதி ஆட்சியர் அலுவலகம் வந்த நபர்: துணைக்கு ஆட்கள் வராததால் திரும்பி சென்ற சோகம்

    மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, இரு தரப்பினருக்கு இடையை மோதல் ஏற்படும் வகையில் மாரிதாஸின் பதிவு இல்லை. அதனுடன் அதை சில மணிநேரங்களில் பதிவை நீக்கி விட்டார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, TN Police

    அடுத்த செய்தி