யூட்யூப் சேனலை முடக்கி விட்டனர்... வருமானமே போச்சு - மதன் மனைவி கிருத்திகா வேதனை

மதன் மற்றும் அவரது மனைவி

நான் பப்ஜி கேம் விளையாடவில்லை. எனக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என யூடியூபர் மதன் மனைவி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக் கொண்டே விளையாடி அதனை யூடியூபிலும் வீடியோவாக வெளியிட்டதாக மதன் மீது சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அடுக்கடுக்காக புகார்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து மதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.

  கிருத்திகா ஜாமினில் சென்றுவிட்ட நிலையில், மதனின் 2 ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவர் ஆபாச யூடியூப் நடத்தியதுடன், ஆன்லைன் கேம் விளையாட வந்த சிறார்களிடமும் பல லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்துள்ளார். தற்போது புழல் சிறையில் இருக்கும் மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், என் கணவர் தடைதடை செய்யப்பட்ட சீனா பப்ஜி விளையாட வில்லை. கொரியன் வெர்ஷ்ன் தான் விளையாண்டார்.3 வருஷமாக என் கணவர் பப்ஜி விளையாண்டு வருகிறார். எங்களிடம் பங்களாவும் இல்லை சொகுசு காரும் இல்லை.ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறார். 4 மணி நேரம் மட்டும் தான் தூங்குவார் என தெரிவித்துள்ளார்.  மேலும் எங்கள் யூட்யூப் பக்கத்தை முடக்கியுள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.நான் பப்ஜி கேம் விளையாடவில்லை. எனக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.காவல் துறை போட்ட வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: