• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • யூடியூபர் மதனின் மனைவி திடீரென செய்தியாளர்களை சந்தித்தது ஏன்?

யூடியூபர் மதனின் மனைவி திடீரென செய்தியாளர்களை சந்தித்தது ஏன்?

Youtube Video

தங்களிடம் சொகுசு கார் இல்லை என்று சொல்லியுள்ள மதனின் மனைவி திடீரென செய்தியாளர்களை சந்தித்தது ஏன்?

  • Share this:
    யூடியூபர் மதன் பப்ஜி விளையாட்டை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி விளையாடிய போது சிறுமிகள் பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக புகார்கள் குவிந்ததால் போலீஸார் அவரைத் தேடி வந்தனர். தருமபுரியில் ஒரு லாட்ஜில் ஒளிந்து கொண்டிருந்த போது, கடந்த 18 ஆம் தேதி போலீசாரிடம் பிடிபட்டார். அப்போது தன்னை விட்டுவிடும்படி போலீஸார் காலில் விழுந்து பப்ஜி மதன் கெஞ்சியதாக கூறப்பட்டது.

    இதனிடையே பப்ஜி மதனுக்கு உடந்தையாக குரலை மாற்றி ஆபாசமாக பேசியதாக மனைவி கிருத்திகாவையும் போலீஸார் கைது செய்தனர். மதன் யூடியூப் மூலம் ஆபாசமாக பேசியதில் வருமானமாக மாதத்திற்கு 7 லட்சம் ரூபாய் வரை கிடைத்ததாக கூறப்பட்டது. அதன் மூலம் இரு சொகுசு கார்கள் மற்றும் சொகுசு வீடுகளை அவர் வாங்கியது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த 4 கோடி ரூபாய் முடக்கப்பட்டது. தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதனின் மனைவி கிருத்திகா கை குழந்தையுடன் இருந்ததால் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மதனை ஒரு வருடம் பிணையில் வர முடியாத வகையில் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    Also Read : நள்ளிரவில் பயங்கரம்... முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி படுகொலை...

    இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகம் வந்த கிருத்திகா அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனது கணவர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த பப்ஜி கேம் விளையாடவில்லை எனவும் அவர் விளையாண்டது கொரியன் வெர்ஷன் பப்ஜி கேம் எனவும் கூறினார். சொகுசு கார் தங்களிடம் இல்லவே இல்லை என ஆணித்தரமாக கூறிய கிருத்திகா தங்களிடம் இருப்பது ஒரே ஒரு ஆடி கார் மட்டுமே எனவும் கூறினார்.

    மேலும் தனது கணவர் பப்ஜி கேமில் ஆபாசமாக தானாக பேசவில்லை எனவும் அவரை நான்கு நபர்கள் சேர்ந்து ட்ரிகர் செய்து பேச வைத்ததாகவும் கூறினார். குறிப்பிட்ட அந்த நான்கு நபர்களே பல இடங்களில் புகார் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

    Also Read : சென்னையில் தாங்கள் பராமரித்து வந்த இடத்தை அபகரிக்க முயற்சி; தீக்குளிக்க முயன்ற பெண்கள்!

    காவல்துறை போட்ட வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று சொல்லிவிட்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் பாதியிலேயே புறப்பட்டார் மதனின் மனைவி கிருத்திகா.

    பப்ஜி மதன் விவகாரத்தில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில், மதனின் மனைவி கிருத்திகா புதிதாக நான்கு பேர் மீது குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: