ஆபசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது

மனைவி உடன் மதன்

மதனின் செல்போன் எண் மூலம், சேலத்தில் இருந்து அவரது மனைவியை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வந்தனர்.

 • Share this:
  யூடியூபர் மதனுடன் இணைந்து, அவருடைய மனைவி கீர்த்திகாவும் ஆபாச பேசிய வீடியோ பதவிட்டுள்ளதால் அவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

  ஆன்லைன் விளையாட்டு மூலமாக சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், சிறுவர், சிறுமியரை மிரட்டி பணம் பறித்ததாகவும் யூடியூபர் மதன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. 159 புகார்கள் இதுவரை வந்துள்ளன. மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும் நிலையில், மதன் தலைமறைவாக உள்ளார். அவர் தரப்பில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

  Also Read : நடிகை வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி

  மதனின் செல்போன் எண் மூலம், சேலத்தில் இருந்து அவரது மனைவியை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வந்தனர். மதனின் தந்தை மற்றும் சகோதரர்கள் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தவர்களிடமும் தனித்தனியை விசாரணை நடைபெற்றது.

  இந்நிலையில் மதனுடன் இணைந்து, அவருடைய மனைவி கீர்த்திகாவும் ஆபாச பேசிய வீடியோ பதவிட்டுள்ளதால் , மனைவி கீர்த்திகாவை கைது செய்துள்ளனர். மேலும் மதனின் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். ஏற்கனவே ஆபாசமாக பேசிய வீடியோக்கள் நீக்கபட்ட நிலையில், சேனலை நிரந்தமராக முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: