ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு கோடிகளை குவித்த மதன்... சிக்கிய மனைவி

மதன்

ஆன்லைனில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த மதன் அதன் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ் பற்றி பேச 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் மதன் யூடியூப் சேனல். சிறுவர்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் பப்ஜி விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேனலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    ஆனால் பப்ஜி விளையாட்டின் ட்ரிக்சைவிட இந்த யூ டியூபில் மணி கணக்கில் ஆபாச வார்த்தைகள் தான் பேசப்படுவதாக புகார்கள் தற்போது எழுந்துள்ளன. இவரது முகத்தை இதுவரை காட்டாததால் இவரால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர்கள் கண்மூடித்தனமாக இவரின் ரசிகர்களாக உள்ளனர்.

    சேனலை பின்தொடர்பவர்கள் அதிகமாக சிறுவர்களாக இருந்தாலும் சலிக்காமல் அவர்களிடமும் ஆபாசவார்தைகளை கொட்டி தீர்க்கின்றார் மதன். ஆன்லைன் விளையாட்டிலேயே ஆடையில்லா வீடியோ சார்ட்டிக்கு அழைப்பது சர்வாதாதாரணம் மதன் யூடியூப் சேனலில்.

    Also Read : நடிகை வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி

    இது போன்று அப்படி இப்படி பேச்சுக்களால் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்ததால் யூடியூபின் வருமானமும் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான பணமும், ரசிகர்களும் இருப்பதால் எதிர்ப்பவர்களை குடும்பத்துடன் காணாமல் போக செய்து விடுவேன் என்று மிரட்டுவது போன்று வீடியோ ஒன்றும் இணையத்தில் உள்ளது.

    ஆன்லைன் விளையாட்டு மூலமாக சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், சிறுவர், சிறுமியரை மிரட்டி பணம் பறித்ததாகவும் யூடியூபர் மதன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. 159 புகார்கள் இதுவரை வந்துள்ளன. மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும் நிலையில், மதன் தலைமறைவாக உள்ளார். அவர் தரப்பில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    Also Read : 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவலம்!

    மதனின் செல்போன் எண் மூலம், சேலத்தில் இருந்து அவரது மனைவியை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வந்தனர். மதனின் தந்தை மற்றும் சகோதரர்கள் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தவர்களிடமும் தனித்தனியை விசாரணை நடைபெற்றது.

    மேலும் ஆபாச வீடியோ மூலம் ஒரு மாதத்திற்கு 7 லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பப்ஜி வீடியோ வெளியிட்டு சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார் மற்றும் 2 சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார்.சென்னை பெருங்களத்தூரில் அருகே அருகே இரண்டு சொகுசு வீடுகளை கட்டியுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனிடையே மதனுடன் இணைந்து, அவருடைய மனைவி கீர்த்திகாவும் ஆபாச பேசிய வீடியோ பதவிட்டுள்ளதால் அவரை கைது செய்துள்ளனர். மேலும் மதனின் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். ஏற்கனவே ஆபாசமாக பேசிய வீடியோக்கள் நீக்கபட்ட நிலையில், சேனலை நிரந்தமராக முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: