சீன அத்துமீறலை எதிர்த்து இந்திய அரசால் தடை செய்யப்பட்டது தான் பப்ஜி விளையாட்டு. தடைசெய்யப்பட்டாலும் விபிஎன் முறையில் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பப்ஜி விளையாட்டை விளையாடி வருகிறது சில கும்பல். இந்த பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ் பற்றி பேச 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் மதன் யூடியூப் சேனல்.
சிறுவர்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் பப்ஜி விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேனலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் பப்ஜி விளையாட்டின் ட்ரிக்சைவிட இந்த யூ டியூபில் மணி கணக்கில் ஆபாச வார்த்தைகள் தான் பேசப்படுவதாக புகார்கள் தற்போது எழுந்துள்ளன.
இவரது
முகத்தை இதுவரை காட்டாததால் இவரால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர்கள் கண்மூடித்தனமாக இவரின் ரசிகர்களாக உள்ளனர். சேனலை பின்தொடர்பவர்கள் அதிகமாக சிறுவர்களாக இருந்தாலும் சலிக்காமல் அவர்களிடமும் ஆபாசவார்தைகளை கொட்டி தீர்க்கின்றார் மதன்.
ஆன்லைன் விளையாட்டிலேயே ஆடையில்லா வீடியோ சார்ட்டிக்கு அழைப்பது சர்வாதாதாரணம் மதன் யூடியூப் சேனலில். இதுபோன்று அப்படி இப்படி பேச்சுக்களால் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்ததால் யூடியூபின் வருமானமும் அதிகரித்துள்ளது.
இப்படி சிறுவர்களிடமும், சிறுமிகளிடமும் ஆபாசமாக பேசுவது சரியா என்று கேட்பவர்களை ஆபாச வார்த்தையில் திட்டி தீர்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மதன்.
மூளைச்சலவை செய்யப்பட்டு, பப்ஜிக்கு அடிமையான பார்வையாளர்களை தன் ரசிகர்களாக வைத்துக்கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை சைபர் தாக்குதல் செய்வது மதனின் பாணி.
கோடிக்கணக்கான பணமும், ரசிகர்களும் இருப்பதால் எதிர்ப்பவர்களை குடும்பத்துடன் காணாமல் போக செய்து விடுவேன் என்று மிரட்டுவது போன்று வீடியோ ஒன்றும் இணையத்தில் உள்ளது. இதற்கெல்லாம் மேலாக சீன அரசின் அத்துமீறலுக்கு எதிராக பப்ஜி விளையாட்டு தடைசெய்யப்பட்ட போது, மதன் பேசியதாக ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அரசையே ப்ரோ என்று அழைத்து ஆரம்பிக்கும் அந்த வீடியோவை காது கொடுத்து கேட்க முடியாது. அரசு மது விற்பனை செய்வதாகவும், போலீசார் பானி பூரிக்கடையில் மாமூல் வாங்குபவர்கள் என்றும் விமர்சித்துள்ளார். இப்படி சிறார்கள், சிறுமிகள், பெண்கள், அரசாங்கம் என்று அனைத்தையும் ஆபாசமாக பேசிவரும் பப்ஜி மதன் மீது பல்வேறு
காவல்நிலையங்களில் புகார்கள் பதிவாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சென்னையில் பதிவான வழக்குத்தொடர்பாக மதனை போலீசார் நேரில் ஆஜராக சொல்லியுள்ளனர். விசாரணை முடிவில் நடவடிக்கை பாயுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.