சிறுவாச்சூர் கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்த புகாரில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான உப கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, இளைய பாரதம் யூடியூப் சேனலை நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த கோயில் படத்தை காண்பித்து, இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டது மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் கோயில் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்ததாக, துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது தொடர்பாக, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் அரவிந்த்குமார் போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதன் பேரில் சென்னை மிட்டனமல்லியில் கார்த்திக் கோபிநாத்துக்கு சொந்தமான ஸ்டூடியோவில் வைத்து, ஆவடி மாநகர காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
Must Read : 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை.. கெத்து காட்டிய அத்தைகள் - பிரம்மாண்டமாக நடந்த மஞ்சள் நீராட்டு விழா!
மேலும், கார்த்திக் கோபிநாத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420, 409 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.