Home /News /tamil-nadu /

ஆபாச பேச்சு: யூ-டியூபர் திவ்யாவை கைது செய்த தனிப்படை போலீஸ்!

ஆபாச பேச்சு: யூ-டியூபர் திவ்யாவை கைது செய்த தனிப்படை போலீஸ்!

ஆபாச பேச்சு: யூ-டியூபர் திவ்யாவை கைது செய்த தனிப்படை போலீஸ்!

ஆபாச பேச்சு: யூ-டியூபர் திவ்யாவை கைது செய்த தனிப்படை போலீஸ்!

வலை தளத்தில் ஆபாச பதிவை வெளியிட்ட தஞ்சையைச் சேர்ந்த யூ-டியூபர் திவ்யாவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

    தேனி அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி(35). டிக் டாக் செயலியில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலம் அடைந்த இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரைப்போலவே இவரது அக்கா நாகஜோதியும் யூ-டியூப் வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு பிரபலமடைந்துள்ளார்.

    இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தைச் சேர்ந்தவர் திவ்யா (30). டிக் டாக் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாகி, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தவர். டிக் டாக் செயலிக்கு தடைவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திவ்யா யூடியூப்பில் ஏராளமான வீடியோக்களை பதிவேற்றம் செய்யத் தொடங்கினார்.

    இதனிடையே, யூ-டியூபர் திவ்யா, சுகந்தி இடையே, கடந்த சில வருடங்களாக மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் காரணமாக இருவரும் மாறி, மாறி வசைபாடி கொள்வது வழக்கமாகும்.

    இந்நிலையில், யூ-டியூபர் திவ்யா, சுகந்தி குறித்து வலைதளங்களில் ஆபாச பதிவுகளை வெளியிட்டதாக சுகந்தி கடந்த மாதம் 14-ம் தேதி தேனி சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையிலான தனிப்படையினர் திவ்யாவை தேடி வந்தனர்.

    இதனிடையே, போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த திவ்யா தலைமறைமானார். தொடர்ந்து, போலீஸார் தன்னுடைய செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்து பின்தொடர்வதைத் தெரிந்து கொண்ட திவ்யா தஞ்சை, சென்னை,  பாண்டிச்சேரி ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொண்டே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நாகூரில் திவ்யாவைச் சுற்றி வளைத்த தனிப்படை போலீஸார் அவரைக் கைது செய்து தேனி சைபர் க்ரைம் அலுவலகம் அழைத்து வந்து விசாரித்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், News On Instagram, Thanjavur, Youtube

    அடுத்த செய்தி