PUBG MADAN OP: மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி: மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன்!

மதன் - கிருத்திகா

மதனின் யுடியூப் நிர்வாகி என்ற முறையில் கிருத்திகாவை கைது செய்து, 9 மாத குழந்தையுடன் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணை முடித்து கீர்த்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வரும் 30 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்

  • Share this:
யூ டியூபர் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரது மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. 

பப்ஜி ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை சட்டவிரோதமாக விளையாடிய மதன், தனக்கென ஒரு யூ டியூப் சேனலை தொடங்கி, பப்ஜி தொடர்பான வீடியோக்களை பதிவேற்றி வந்தார். பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததாக எழுந்த புகாரையடுத்து  முதலில் மதனின் மனைவி கிருத்திகாவை கைது செய்தனர் போலீசார்.

மதனின் யுடியூப் நிர்வாகி என்ற முறையில் கிருத்திகாவை கைது செய்து, 9 மாத குழந்தையுடன் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணை முடித்து கீர்த்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வரும் 30 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து,  தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை போலீசார் கைது செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிருத்திகா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணைக்கு பிறகு, 8 மாத கைக் குழந்தையை கருத்தில் கொண்டு சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசு வழங்கிய நெல் நட்டு 12 நாட்கள் ஆகியும் முளைக்கவில்லை: விவசாயிகள் வேதனை!


அதேவேளையில், தனக்கும் ஜாமீன் வழங்கக் கோரி மதன்11வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  எனினும் , இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published by:Murugesh M
First published: