• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • YouTube Pubg Madan : யூடியூபர் பப்ஜி மதன் கைது... தருமபுரியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர்!

YouTube Pubg Madan : யூடியூபர் பப்ஜி மதன் கைது... தருமபுரியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர்!

யூடியூபர் பப்ஜி மதன்

யூடியூபர் பப்ஜி மதன்

நியூஸ் 18 தமிழ்நாடு, ஆபாச யூடியூபர் மதன் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது அதன் அடிப்படையில் அதிகரித்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

  • Share this:
    முகத்தை காட்டாமல் தனது ஆபாச சேனலில் பேசிவந்தவர் மதன். இவர் தற்போது குடும்பத்துடன் சிக்கியுள்ளார். சில தினங்களுக்கு முனனர், மதனின் மனைவி கைதான நிலையில் மதன்குமார் மாணிக்கத்தின் உல்லாச வாழ்க்கை அம்பலமானது. கோடியில் புரண்ட மதன், தடைசெய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் போது, அடாவடி ஆபாசமாக யூடியூப் பக்கத்தில் பேசிவந்தார்.

    மூன்று ஆண்களுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தான் யார் என்ற அடையாளத்தை வெளிகாட்டாமல் ஆரவாரமாக ஆபாசமாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தார். இவரது பேச்சால் மூளைசலவை செய்யப்பட்ட சிலர் கண்மூடித்தனமாக இவரது ரசிகர்களாகினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மதனின் ஆபாச யூடியூபர் பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு கடந்த பத்தாம் தேதி செய்தி ஒளிப்பரப்பியது. அன்று இரவே அலார்டான அடாவடி மதன்குமார் மாணிக்கம் தலைமறைவானார். நியூஸ் 18 தமிழ்நாடு ஆபாச யூடியூபர் மதன் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. அதன் அடிப்படையில் அதிகரித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    14ஆம் தேதி விசாரணையை துரிதப்படுத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை பெருங்களத்தூரில் உள்ள மதனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிசென்றதால் அவரது தந்தை மாணிக்கம் மற்றும் அவரது சகோதரரிடம் விசாரணையை தொடங்கினர். இதே நேரத்தில் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு தாய்வீட்டில் இருந்த அவரது மனைவி கீர்த்திகாவை பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மதனின் ஆபாச பேச்சு யூடியூப் பக்கம் கீர்த்திகா பெயரில்தான் இருந்துள்ளது. மேலும், மதனின் யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாகவும் இருந்துள்ளார். மதன் யூடியூப் சேனலில் மதன் நேரலை வரும் போது கீர்த்திகாவும் நேரலையில் வந்து ஆபாச பேச்சுகளை பேசியுள்ளார்.

    இதையடுத்து மதனின் குற்றத்திற்கு உடைந்தையாக இருந்த கீர்த்திகாவை கைது செய்த போலீசார் சென்னை அழைத்துவந்தனர். மேலும், விசாரணை முடித்து கீர்த்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வரும் 30 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    ஆபாச வார்த்தைகளை கோர்வையாக பேசுவதால் மதனின் யூடியூப் மற்றும் சூப்பர் சாட் மூலமாக வருமானம் கொட்டியுள்ளது. யூடியூப் சேனல் மூலமாக மட்டும் மாதம் 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பார்துள்ளார் மதன். பிற யூடியூப் சேனல்களுக்கு தனது ஆபாச வீடியோக்களை விற்பது மூலமாகவும் ஒரு பெரும் தொகையை பெற்றுள்ளார்.

    இரண்டு பி.எம்.டபில்யூ கார்கள், ஆடி கார் என்று மதன்குமார் மாணிக்கம் வைத்துள்ள காரின் மதிப்பு மட்டும் 2 கோடிக்கு மேல் என்கின்றனர் காவல்துறையினர். அத்துடன் சென்னை பெருங்களத்தூரில் இரண்டு தனி சொகுசு வீடுகள் பல நிறுவனங்களில் முதலீடு என்று ஏகபோக உல்லாசத்துடன் இருந்துள்ளார்.

    Must Read : முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய மதுரைக்கு விரைந்த தனிப்படை

    மதன் தனது பெருங்களத்தூர் வீட்டில் இருந்துதான், ஆபாச பேச்சுகளை அரங்கேற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பயன்படுத்திய கணினி ஒன்றையும் மனைவியின் செல்போனையும் பறிமுதல் செய்த காவல்துறையினர். அதன் அடிப்படையில் ஆதாரங்களை பெற்று குற்றங்களை ஆய்வு செய்து விசாரணை தொடங்கினர்.

    “பப்ஜி விளையாட்டின் கிங்” என்று தன்னை தானே புகழ்ந்து கொண்டு பேசிய மதன், “எனது முகத்தை யாரும் பார்க்க முடியாது காவல்துறையினர் நமக்கு முன்னாடி சும்மா ப்ரோ” என்ற சவடலாக பேசியவர் தற்போது காவல்துறையினரால் பிடிபட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: