ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

PUBG Madan : ‘என்னை விட்டுவிடுங்கள்’... போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி மதன்

PUBG Madan : ‘என்னை விட்டுவிடுங்கள்’... போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி மதன்

பப்ஜி மதன்

பப்ஜி மதன்

30 சதவிகித சிறுவர்கள் மதனின் யூடியூப் சேனலை பின்தொடர்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை திரட்டும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தருமபுரியில் கைது செய்யப்ட்ட யூடியூபர் பப்ஜி மதன் காவல்துறை காலில் விழுந்து கண்ணீர் விட்டு கெஞ்சியாதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நியூஸ் 18 தமிழ்நாடு, ஆபாச பேச்சு யூடியூபர் மதன் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. அதன் அடிப்படையில் அதிகரித்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிரைலயில், தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சிறிய வீட்டில் யூடியூபர் பப்ஜி மதன் தலைமறைவாக இருந்த போது போலீஸ் கைது செய்தனர். அப்போது, ‘இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன், என்னை விட்டு விடுங்கள்’ என்று காவல்துறையினரிடம் கூறி கெஞ்சி அழுதுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆதாரங்களை சேகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் வரை தனது யூடியூப் சேனலில் மதன் பெண்களுடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

  பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி யூடியூப்பில் வெளியிட்ட வழக்கில் அட்மினாக செயல்பட்ட மதனின் மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில் பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி ஒளிபரப்புவதன் மூலம் மாதந்தோறும் 10லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தாகவும், 3 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாவை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

  பப்ஜி மதன் அம்பத்தூரில் ஆடம்பரமான ஹீரோ என்ற பெயரில் அசைவ உணவகம் ஒன்றை நடத்தி, பின்னர் உரிமையாளருக்கு உரிய தொகையைத் தராமல் மோசடி செய்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் 1வருடமாக வாடகை எடுத்து ஹோட்டலை மதன் நடத்தி வந்துள்ளார்.

  அத்துடன், ஹோட்டலை காட்டி மதன் வங்கிகளிடம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கடனை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஹோட்டலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாடகை தராமல் உரிமையாளரை ஏமாற்றியுள்ளார். இதனால் உரிமையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் மதன் மீது புகார் அளித்தார்.

  இதன் பிறகுதான், மதன் தனது அடையாளத்தை காட்டாமல் மனைவி கிருத்திகாவுடன் இணைந்து யூடியூப் சேனலை தொடங்கி பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி லட்சங்களை குவித்து பப்ஜி மதனாக மாறியது விசாரணையில் தெரியவந்தது.

  மேலும், பப்ஜி மதன் வீடியோ பதிவேற்றம் செய்வதற்காக 3 சிம்கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட விளையாட்டை வி.பி.என் சர்வரை பயன்படுத்தி ஒளிப்பரப்பு செய்து வந்ததும் தெரியவந்தது.

  இதனையடுத்து பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி, சிறுமிகளிடம் மதன் பணப்பறிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

  Must Read : யூடியூபர் மதன்... உல்லாச வாழ்க்கை... தம்பதியாக சேர்ந்து மோசடியில் ஈடுப்பட்ட பகீர் பின்னணி

  இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 30 சதவிகித சிறுவர்கள் மதனின் யூடியூப் சேனலை பின்தொடர்வதாக தெரிவித்துள்ளதால் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை திரட்டும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், மதன் தருமபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார். “குழந்தைகளையும், பெண்களையும் சீரழித்து விட்டேன். இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன், என்னை விட்டு விடுங்கள்” என காவல்துறையினரிடம் மதன் கெஞ்சியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Online Game PUBG, PUBG, YouTuber Madan