ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

யூடியூபர் மதன்... உல்லாச வாழ்க்கை... தம்பதியாக சேர்ந்து மோசடியில் ஈடுப்பட்ட பகீர் பின்னணி

யூடியூபர் மதன்... உல்லாச வாழ்க்கை... தம்பதியாக சேர்ந்து மோசடியில் ஈடுப்பட்ட பகீர் பின்னணி

மதன்

மதன்

சென்னை பெருங்களத்தூரில் இரண்டு தனி சொகுசு வீடுகள் பல நிறுவனங்களில் முதலீடு என்று ஏகபோக உல்லாசத்துடன் இருந்துள்ளார் மதன்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  ஆபாச யூடியூபர் மதனின் மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தம்பதியாக சேர்ந்து மோசடியில் ஈடுப்பட்ட பகீர் தகவல்கள் தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது. ஆபாசமாக பேசி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த மதன் சிக்குவாரா?

  ஐந்தாண்டுகளுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தனது ஆபாச சேனலில் பேசிவந்தவர் மதன். இவர் தற்போது குடும்பத்துடன் சிக்கியுள்ளார். மதனின் மனைவி கைதாகியுள்ள நிலையில் மதன்குமார் மாணிக்கத்தின் உல்லாச வாழ்க்கை அம்பலமாகியுள்ளது. கோடியில் புரண்ட மதன், தடைசெய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் போது, அடாவடி ஆபாசமாக யூடியூப் பக்கத்தில் பேசிவந்தவர் மதன்குமார் மாணிக்கம். மூன்று ஆண்களுக்கு மேலாக முகத்தை காட்டாமல் தான் யார் என்ற அடையாளத்தை வெளிகாட்டாமல் ஆரவாரமாக ஆபாசமாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிவந்தார். இவரது பேச்சால் மூளைசலவை செய்யப்பட்ட சிலர் கண்மூடித்தனமாக இவரது ரசிகர்களாகினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தனது ரசிகர் பட்டாளம் அதிகரிக்க அதிகரிக்க யூடியூப் வருமானமும் பல வழிகளில் பல கோடிகளை சம்பாதிக்க வைத்துள்ளது. எல்லை மீறிய மதன்குமார் மாணிக்கத்தின் ஆபாச பேச்சுகள் பற்றி காவல்துறைக்கு புகார்களாக வர தொடங்கியது. புகார்களை பெற்றுக்கொண்டு பொறுமையாக இருந்த போலீசார் தற்போது தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

  ஆபாச யூடியூபர் பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியில் கடந்த பத்தாம் தேதி ஒளிப்பரப்பானது. அன்று இரவே அலார்டான அடாவடி மதன்குமார் மாணிக்கம் தலைமறைவாகியுள்ளார் கடைசியாக சேலத்தில் இருந்த தன் மனைவி கீர்த்திகா தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டுள்ளார்.

  14 ஆம் தேதி விசாரணையை துரிதப்படுத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை பெருங்களத்தூரில் உள்ள மதனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிசென்றதால் அவரது தந்தை மாணிக்கம் மற்றும் அவரது சகோதரரிடம் விசாரணையை தொடங்கினர். இதே நேரத்தில் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்ற போலீசார் அங்கு தாய்வீட்டில் இருந்த அவரது மனைவியை பிடித்தனர்.

  அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மதனின் ஆபாச பேச்சு யூடியூப் பக்கம் கீர்த்திகா பெயரில் தான் இருந்துள்ளது. மேலும், மதனின் யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாகவும் இருந்துள்ளார். மதன் யூடியூப் சேனலில் மதன் நேரலை வரும் போது கீர்த்திகாவும் நேரலையில் வந்து ஆபாச பேச்சுகளை பேசியுள்ளார்.

  இதையடுத்து மதனின் குற்றத்திற்கு உடைந்தையாக இருந்த கீர்த்திகாவை கைது செய்த போலீசார் சென்னை அழைத்துவந்தனர். மேலும், விசாரணை முடித்து கீர்த்திகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வரும் 30 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

  அடியோ அடி.. இடியோ இடி.. புடியோ புடி என்று ஆபாச வார்த்தைகளை கோர்வையாக பேசுவதால் மதனின் யூடியூப் மற்றும் சூப்பர் சாட் மூலமாக வருமானம் கொட்டியுள்ளது. யூடியூப் சேனல் மூலமாக மட்டும் மாதம் 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பார்துள்ளார் மதன் அது மட்டும் இல்லாமல் பிற யூடியூப் சேனல்களுக்கு தனது ஆபாச வீடியோக்களை விற்பது மூலமாகவும் ஒரு தொகை பார்த்துவந்துள்ளார்.

  இரண்டு பி.எம்.டபில்யூ வகை கார்கள் ஒரு ஆடி கார் என்று மதன்குமார் மாணிக்கம் வைத்துள்ள காரின் மதிப்பு மட்டும் 2 கோடிக்கு மேல் என்கின்றனர் போலீசார். அத்துடன் சென்னை பெருங்களத்தூரில் இரண்டு தனி சொகுசு வீடுகள் பல நிறுவனங்களில் முதலீடு என்று ஏகபோக உல்லாசத்துடன் இருந்துள்ளார்.

  பெருங்களத்தூர் வீட்டில் இருந்தவாரேதான் மதன் தனது ஆபாச பேச்சுகளை அரங்கேற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பயன்படுத்திய கணினி ஒன்றையும் மனைவியின் செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆதாரங்களை பெற்று எந்த எந்த தவறுகளை அரங்கேற்றினார் மதன் என்று விசாரணை தொடங்கியுள்ளது.

  Must Read : பெற்ற தாயையே கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட ஸ்பெயின் இளைஞருக்கு 15 ஆண்டு சிறை

  எனது முகத்தை யாரும் பார்க்க முடியாது போலீஸ்லாம் நமக்கு முன்னாடி சும்மா ப்ரோ என்ற சவடலாக பேசியவர் தற்போது ஓரு வாரத்திற்கு மேலாக தலைமறைவாக உள்ளார். பப்ஜி விளையாட்டின் கிங் என்று தன்னை தானே புகழ்ந்து கொண்டு பேசும் மதன் தற்போது எங்கே பதுங்கியிருக்கின்றார் என்று போலீசார் தேடிவருகின்றனர்.

  விளையாட்டில் தன்னிடம் தோல்வி அடைபவர்களை வெளியே போ.... என்று தவறான வார்தைதயில் திட்டி தீர்க்கும் மதனை விரைவில் போலீசார் ‘மத்திய குற்றபிரிவு அலுவலகத்திற்கு வா மதன்’ என்று அழைத்து போக உள்ளதாக தெரிகின்றது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Police, Youtube, YouTuber Madan