ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் இளைஞர்கள்... யார் இவர்கள்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் இளைஞர்கள்... யார் இவர்கள்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை, பெற்ற பிள்ளைகள் மற்றும் உறவினர்களே பார்க்க அச்சப்படும் நிலையில், அவர்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மரணம் தான் ஒரு மனிதனுக்கு இறுதி அமைதி என்றபோதிலும், கொரோனா நோயால் இறப்பவர்களுக்கு அந்த அமைதியும் வாய்க்கப்படுவதில்லை என்பது வேதனை தரும் உண்மையாக இருந்துவருகிறது.

  கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை அவர்கள் வாழ்ந்த வீடுகளிலேயே வைக்கமுடியாத அவலமும், நல்லடக்கம் செய்வதற்கு இடம் தர மறுக்கும் கொடுமையும், பெற்ற பிள்ளைகள் மற்றும் உறவினர்களே உடல்களை புறக்கணிக்கும் கொடுந்துயரமும், இன்றைய உலகின் புதிய நடைமுறையாக மாறியுள்ளது.

  இத்தகைய சூழலிலும், கொரோனா நோயாளிகளின் உடல்களை, உரிய மரியாதையுடன், அவர்களின் மத வழக்கத்தின் படியும் நல்லடக்கம் செய்துவருகின்றனர் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.

  உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி, இதுவரை 32 உடல்களை நல்லடக்கம் செய்துள்ள இந்த இளைஞர்கள், சென்னை முழுவதுக்கும் 18 குழுக்கள் அமைத்து மொத்தம் 120 பேர் களப்பணி செய்து வருகின்றனர். உடல் அடக்கம் செய்ய பணம் தரமுடியவில்லை என்றாலும், இவர்களே அதற்கான செலவையும் ஏற்றுக்கொள்கின்றனர்.

  தங்களது குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் கடந்து பொதுச் சேவையில் இறங்கி இருக்கும் இவர்கள், தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், பாதுகாப்பு உடைகள், மருத்துவ பரிசோதனை செய்வதற்கு அரசு முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

  ஒவ்வொரு நாளும் உடல்களை அடக்கம் செய்யும் போது, நாளை எந்த உடலும் வரக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் சேவையாற்றும் இந்த இளைஞர்கள், கொரோனா காலத்தின் நாயகர்களாக திகழ்கின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: CoronaVirus