மது அருந்தும் போட்டி என்று விளம்பரம்... போலீசிடம் சிக்கிய இளைஞர்கள்...!

வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதால் மதுப்பிரியர்கள் ஆர்வமாக கலந்துகொள்ள முற்பட்டனர்.

மது அருந்தும் போட்டி என்று விளம்பரம்... போலீசிடம் சிக்கிய இளைஞர்கள்...!
வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதால் மதுப்பிரியர்கள் ஆர்வமாக கலந்துகொள்ள முற்பட்டனர்.
  • News18
  • Last Updated: February 3, 2020, 7:48 AM IST
  • Share this:
கரூர் மாவட்டம் புனவாசிபட்டியில் மது அருந்தும் போட்டி நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கரூர் மாவட்டம் புவனாசிப்பட்டியில் மது அருந்தும் போட்டி நடப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று பரவியது.

நுழைவுக்கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார், புனவாசிப்பட்டியைச் சேர்ந்த 4க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்களை விளையாட்டுக்காக வாட்ஸ் ஆப்பில் மது அருந்தும் போட்டி குறித்த செய்தியை பரவ விட்டது தெரியவந்தது.
 

 

 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்