Home /News /tamil-nadu /

தேவர் குருபூஜையின் போது காவல்துறை வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் கைது!

தேவர் குருபூஜையின் போது காவல்துறை வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் கைது!

தேவர் ஜெயந்தி: காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் கைது..

தேவர் ஜெயந்தி: காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் கைது..

ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜையின் போது காவல்துறை வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரி வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் குத்தாட்டம் போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இளைஞர்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்த மறைந்த தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை கடந்த அக்டோபர் 30-ம் தேதி நினைவு கூறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குருபூஜை விழா அக்டோபர் 30-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இங்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக சார்பில் அண்ணாமலை, எச் ராஜா, ஆர்கே சுரேஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேவர் நினைவிடத்துக்கு வந்த அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாதுகாப்பு பணிக்காக வந்த காவல்துறை வாகனம் மற்றும் அரசு அதிகாரி வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் குத்தாட்டம் போட்டனர். அதில் ஒருவர் அரசு வானத்தை வழிமறித்து காலை வைத்து ஆடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இந்நிலையில், கமுதி போலீசார் 29, 30ம் தேதிகளில் சிசிடிவி கேமராவில் வாகனம் மீது நடனம் ஆடியதாக பதிவான வீடியோ காட்சிகளை வைத்து பார்த்தில் கல்லூரி மாணவர்கள் அஜய்குமார், கருப்புசாமி, வாசு ஆகிய 3 பேரும், அவர்களோடு காளீஸ்வரன், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேரை கமுதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Muthuramalinga Thevar, Thevar Jayanthi

    அடுத்த செய்தி