• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘சரக்கு இருக்கு ஆனா சைடிஷ் இல்லை’ - கடையில் கைவரிசை காட்டிய இளைஞர்கள்

‘சரக்கு இருக்கு ஆனா சைடிஷ் இல்லை’ - கடையில் கைவரிசை காட்டிய இளைஞர்கள்

மது குடிக்க சைடிஷ் திருடிய இளைஞர்கள்

மது குடிக்க சைடிஷ் திருடிய இளைஞர்கள்

ஆயுத பூஜை நேரத்தில், கடையில் ஆட்டைய போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

  • Share this:
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் உள்ள ஒரு மளிகை கடையில் தின்பண்டங்களை சில இளைஞர்கள்  திருட்டிச் சென்றது அங்கிருந்த சிசிடிவி வீடியோ பதிவில் தெரியைவந்ததைத் தொடர்ந்து, அந்த இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த இளைஞர்கள் மது குடிப்பதற்கா இந்த சைடிஷ்  வகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் ஆனந்த் மளிகை ஸ்டோர் என்ற மளிகை கடை உள்ளது. சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இந்த கடையில் வந்து மளிகை பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். நேற்று ஆயுத பூஜை என்பதால் தனது கடையை சுத்தம் செய்த கடையின் உரிமையாளர் தயாளன் கடையுடன் சேர்ந்த தனது வீட்டிற்கு மாலை 6 மணிக்கு பூஜை செய்தற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார்.

வீட்டில் ஆயுத பூஜைக்கு வழிபாட்டை முடித்து விட்டு, கடைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, கடையில் உள்ள சில பொருட்கள் குறைந்திருப்பதைக் கண்டார். இதனைத்தொடர்ந்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்த தயாளன் அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கள் கடைக்கு வந்து கடையில் உள்ள பொருட்களை இடுப்பில் சொருகிக் கொண்டும் கையில் பிடித்துக்கொண்டும் சர்வசாதரணமாக செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. பாட்டில் பாட்டிலாக சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள், குளிர்பான பாட்டில்களை அவர்கள் எடுத்துச் சென்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தயாளன் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் தங்கள் சொந்த கடையில் இருந்து பொருட்களை எடுத்தது செல்வது போல் எடுத்துச்சென்ற மணி, விரமணி, தினேஷ், விஜயகுமார், ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.



Must Read : ஃபேசியலுக்கு மட்டும் ரூ.92,000: 3 நாட்களில் ரூ.5.50 லட்சம் செலவு... ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்த கொள்ளையன் கைது

ஆயுத பூஜை நேரத்தில், கடையில் ஆட்டைய போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. ‘சரக்கு இருக்கு ஆனா சைடிஷ் இல்லையே, அதான் நம்ம அண்ணாட்சி கடையில் ஆட்டைய போட்டுட்டாடங்க’ என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: