• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை... ரவுடி தலையை துண்டித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்!

உறவுக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை... ரவுடி தலையை துண்டித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்!

உயிரிழந்த முத்துவேல்

உயிரிழந்த முத்துவேல்

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரையில் உறவுக்கார பெண்ணை கடத்தி சென்று நான்கு நாட்கள் பாலியல் தொல்லை தந்ததாக ரவுடியின் தலையை துண்டித்த இளைஞர், தலையோடு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் முத்துவேல், அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி. பன்றி இறைச்சி விற்பனையை பகுதி நேரமாகவும் ரவுடி தொழிலை முழு நேரமாகவும் செய்து வருகிறார். திருமணம் ஆகாத நிலையில் அப்பகுதி இளைஞர்கள் பலருடன் நட்பில் இருந்துள்ளார். அவ்வாறு நட்பு வட்டாரத்தில் இணைந்தவர் தான் நாகராஜன்.

சமீபத்தில் நாகராஜனின் உறவுக்கார பெண் ஒருவரை கடத்தி சென்ற முத்துவேல், நான்கு நாட்கள் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்து பின் மீண்டும் வீட்டில் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் முத்துவேல் மீது நாகராஜூவிற்கு தீராத கோபம் இருந்துள்ளது.

Also See... கந்துவட்டியால் பாதிக்கப்பட்டுள்ள காவலர்கள்...! பரபரப்பு தகவல்கள்

இந்நிலையில் நேற்று இரவு அலங்காநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள பொதுக்கழிப்பறைக்கு முத்துவேலை அழைத்து சென்ற நாகராஜன், வாங்கி வந்த மதுபானத்தை இருவரும் பங்கிட்டு அருந்தியுள்ளனர். முத்துவேல் நல்ல போதை ஆனதும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துவேலின் கழுத்தை அறுத்த நாகராஜன், துடிக்க துடிக்க அவரை கொலை செய்து தலையை தனியாக துண்டித்தார்.

ரத்தம் சொட்ட சொட்ட கையில் தலையுடன் அருகில் இருந்த காவல் நிலையம் வந்த நாகராஜன், சம்பவத்தை கூறி சரணடைந்தார். அதிர்ந்து போன போலீசார் தலையை கைப்பற்றி உடல் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சடலத்தை அடையாளம் கண்டனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சடலத்தை கைப்பற்றிய அலங்காநல்லூர் போலீசார், நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் அருகே கைதி தலை துண்டிக்கப்பட்டதும், துண்டிக்கப்பட்ட தலையோடு காவல் நிலையத்தில் குற்றவாளி சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also See... பெண் காவலரை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காவலர் கைது!

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: