திருநங்கை சேர்ந்து வாழ மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற திருநங்கைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருநங்கையான கவிதாவுடன் ஒன்றாக வசிக்கத் தொடங்கினார் தினேஷ். கடந்த நான்கு வருடமாக இவர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தினேஷ் மற்றும் கவிதா இடையே நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை கவிதா, தினேஷின் பெற்றோருக்கு போன் செய்து உங்களுடைய மகனை வந்து அழைத்து செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து திருவேலங்காரு கூடல்வாடியில் இருந்து புறப்பட்டு தினேஷின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளனர். மகனுக்கு அறிவுரை கூறி அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். திருநங்கை கவிதாவை பிரிய மனமில்லாமல் ஒருமனதாகவே அவர் சென்றுள்ளார். இந்நிலையில் ஊருக்கு செல்லாமல் பாதிவழியில் இறங்கி கவிதாவை காண திரும்பவும் ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளார். மதுபோதையில் கவிதாவை பார்க்க சென்றுள்ளார். ஆனால் வீட்டில் அவர் இல்லாததால் விரக்தியடைந்துள்ளார்.
வீட்டில் இருந்த கவிதாவின் சேலையை எடுத்துக்கொண்டு ஏரிக்கரை பகுதிக்கு சென்று தினேஷ். அங்கு உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் தினேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கையின் பிரிவால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.