ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கடித்த பாம்பை உயிரோடு பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த இளைஞர்

கடித்த பாம்பை உயிரோடு பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த இளைஞர்

கடித்த பாம்பை உயிரோடு பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த இளைஞர்

கடித்த பாம்பை உயிரோடு பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த இளைஞர்

கோவையில் தன்னை கடித்த நாக பாம்பை உயிருடன் பிடித்து பையில் போட்டுக்கொண்டு இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு  வந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை  பகுதியை சேர்ந்தவர் சௌந்தராஜன். பெயின்டிங் வேலை செய்து வருகின்றார். இவர்  சௌரிபாளையம் பகுதியில் நண்பர் வீட்டிற்கு வந்த போது அங்குள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்துள்ளது. மது போதையில் இருந்த சௌந்தராஜன் பாம்பை அடிக்க போன போது நாக பாம்பு அவரை கையில் கடித்தது.

இதனையடுத்து அந்த பாம்பை பிடித்த அவர், ஒரு பையில் பாம்பை போட்டுக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.  பாம்பை உயிருடன் பிடித்து வந்த்தை பார்த்த அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து பாம்பை அரசு மருத்துவமனையில் பணியில்  இருந்தவர்களிடம் காட்டிவிட்டு மீண்டும் அந்த பாம்பை பையில் போட்டு அரசு மருத்துவமனை பணியில் இருந்த செக்யூரிட்டிகளிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.

இதனிடையே பாம்பு கடிதத்தில் காயமடைந்த  சௌந்தரராஜனுக்கு அரசு மருத்துவ மனையில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க...

ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published:

Tags: Coimbatore, Snake