நடிகர் அஜித் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

இவர் ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டிற்கு இது போன்று மிரட்டல் விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடிகர் அஜித் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
  • Share this:
நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து,  இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ,மோப்ப நாயுடன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கு பின் இது வெறும் புரளி என தெரியவந்தது.


இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர் மிரட்டியது தெரியவந்த்து.
இதனையடுத்து மிரட்டல் விடுத்த புவனேஸ்வரன் என்ற 20 வயதான நபரை நேற்றிரவு மரக்காணம் போலீசார் கைது செய்து, நீலாங்கரை காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர் ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டிற்கு இது போன்று மிரட்டல் விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading