திருச்சியில் விஜய் படப்பாணியில் நடந்த சம்பவம்... '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்த இளைஞர்...

திருச்சியில் விஜய் படப்பாணியில் நடந்த சம்பவம்... '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்த இளைஞர்...

திருச்சி ரமேஷ்குமார்

அபுதாபியில் பொறியாளராக உள்ள ரமேஷ்குமார், வாக்களிப்பதற்காக திருச்சி வந்துள்ளார். இன்று வாக்குச்சாவடிக்கு சென்ரு பார்த்த போது அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில், 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். இதில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன.

இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கனவே பதிவானது கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ்குமார் தனது ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை வாக்குச்சீட்டு மூலமாக செலுத்தினார்.

மேலும் படிக்க... சுடுகாடு இல்லை... தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...

அபுதாபியில் பொறியாளராக உள்ள ரமேஷ்குமார், வாக்களிப்பதற்காக திருச்சி வந்துள்ளார் என்பதும் இவரது பெயரில் போலியான ஆதார் அட்டையைக் காட்டி வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: