திண்டுக்கல் அருகே தான் காதலித்த பெண்ணை மற்றொருவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்ததால் காதலியுடன் நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலனுக்கு உறவினர்கள் தர்ம அடி உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சேலத்தை சேர்ந்த டிப் டாப் இளைஞன் ஒருவன் வேடசந்தூரை சேர்ந்த இளம் பெண்ணிடம் சமூக வலைதளம் மூலம் பழகி நாளடைவில் காதலாக மாறி இருவரும் வீடியோகாலில் உள்ளாடையின்றி இருந்த புகைப்படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அந்தப் பெண்ணை மிரட்டி வந்த டிப்டாப் இளைஞனை சரமாரியாக அடித்து உதைத்த பெண்ணின் உறவினர்கள்.
இன்ஸ்டாகிராம் காதல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரத்தை சேர்ந்த மேகநாதன் என்பவருடன் அந்தப்பெண் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். சில நாட்கள் நட்பாக பழகி வந்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.இருவரும் தங்களது காதலை சமூகவலைதளம் மூலம் வளர்த்து வந்த நிலையில் நாளடைவில் இருவரும் நேரில் சந்தித்து பழகி வந்துள்ளனர்.
இளம்பெண் கொடைக்கானலில் படித்து வந்த நிலையில் மேகநாதன் அவ்வப்போது கொடைக்கானலுக்கு சென்று சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு விட்டில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனை அறிந்த மேகநாதன் உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி வரவழைத்து அந்த பெண்ணின் செல்போன் மூலம் அவருடைய உறவினர்களின் செல்போன் எண்களை பெற்றுக் கொண்டார்.
இருவரும் காதலர்களாக இருந்தபோது வீடியோ கால் மூலம் பேசி வந்தபோது அதில் இருவரும் உள்ளாடையின்றி பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருந்த இளைஞன் அந்தப்புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது, அதன்பின்பு உறவினர்கள் மூலம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மேகநாதனை வரவழைத்து விசாரனை நடத்தினர்.அப்போது நான் செய்தது தவரு தான் என்றும் இனி இது போன்று தவறு செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
Also Read: தண்ணீருக்காக போராடும் யானை விழிப்புணர்வு வீடியோ - இரக்கப்படும் நெட்டிசன்கள்
அந்தரங்க புகைப்படத்தை காட்டி மிரட்டல்
இதனையடுத்து இம்மாதம் 9ம் தேதி அந்த பெண்ணிற்கு திருமணம் முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் அந்த பெண்ணை தொட்பு கொண்ட மேகநாதன் மீண்டும் மிரட்டியுள்ளான். மிரட்டியது மட்டுமின்றி அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்ய இருந்த மணமகனுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளான் இதனை அறிந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியதாகவும் இதனால் மன வேதனையடைந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் அந்தப்பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
டிப்டாப் ஆசாமிக்கு இளம்பெண் உறவினர்கள் விரித்த வலை
இதனையடுத்து உறவினர்களின் ஆலோசனைப்படி மேகநாதனை தனது சொந்த ஊருக்கு வருமாறும் நான் உன்னுடன் பேச வேண்டும் எனவும் பேசி வரவழைத்துள்ளார். மகிழ்ச்சியில் நேற்று இரவு தனது நண்பர்கள் மூவருடன் வேடசந்தூர் அருகே உள்ள அந்தப்பெண்ணின் சொந்த ஊரான கருதனம்பட்டிக்கு ஒரு காரில் 4 பேர் வந்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஊருக்குள் வந்த காரை அந்தப்பெண்ணின் உறவினர்கள் சுற்றி வளைத்தனர். இதில் மேகநாதன் உடன் வந்த நண்பர்கள் தப்பித்து ஓடிவிட மேகநாதன் உறவினர்களிடம் சிக்கிக் கொண்டான்
சிக்கிய மேகநாதனை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
இதனையடுத்து எரியோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறையினர் மேகநாதன் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் மேகநாதனை தாக்கிய அந்தப் பெண்ணின் உறவினர்கள் சிலரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அந்தப்பெண்ணின் உறவினர்கள் கூறும்போது மேகநாதனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் இதற்கு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: சங்கர் ( திண்டுக்கல்)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.