போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக உரிய நேரத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு செல்ல இயலாமல் பட்டதாரி இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டார்.
சென்னை வண்டலூரை சேர்ந்த முகமது இசாக் இன்று காலை 10 மணிக்கு போரூரில் உள்ள தனியார் அலுவலகத்திற்கு இன்டர்வியூ செல்ல திட்டமிட்டு காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். வழக்கமாக வண்டலூரில் இருந்து போரூர் செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும் என்பதால் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டார் முகமது இசாக்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை காரணமாக, இன்று பேருந்துகள் பெருமளவில் இயங்காத நிலையில், நீண்ட நேரமாக வண்டலூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக அவர் காத்து இருந்துள்ளார்.
கடைசிவரை வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பேருந்துகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த முகமது இசாக்
வேறு வழி இல்லாமல் அங்கு வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தடைந்து அங்கிருந்து மாறி மாறி செல்ல தொடங்கினார்.
மேலும் படிக்க: ஐநாக்ஸ் திரையரங்குகளை கைப்பற்றிய பி.வி.ஆர் குரூப் : 'தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பாதிப்பு' - திருப்பூர் சுப்பிரமணியம்
இதனால் காலை 10 மணிக்கு நேர்முகத்தேர்வுக்கு செல்லவேண்டிய முகமது இசாக் 11 மணி ஆகியும் குரோம்பேட்டை பகுதியைக் கூட தாண்ட முடியாமல் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.