தூத்துக்குடியில் உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றிக்கொன்ற இளைஞர்...

தூத்துக்குடியில் உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றிக்கொன்ற இளைஞர்...

மாதிரிப் படம்

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றிக்கொன்ற இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

  • Share this:
தூத்துக்குடியில் ஏரல் பகுதியில் முருகேசன் என்ற இளைஞர் இரவில் குடிபோதையில் தகராறு செய்ததை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு கண்டித்துள்ளார். மேலும் பாலுவின் சரக்கு வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் கடைவீதியில் மீண்டும் முருகேசன் தகராறில் ஈடுபட்டார். அப்போதும் அவரைக் கண்டித்த போலீசார், காலையில், காவல்நிலையம் வந்து வாகனத்தை எடுத்துச்செல்லுமாறு கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாலு மற்றும் காவலர் பொன்.சுப்பையா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றபோது, அவர்கள் மீது மற்றொரு சரக்கு வாகனத்தை முருகவேல் மோதியதாகக் கூறப்படுகிறது. இருசக்கர வாகனத்தின் பின்னாள் அமர்ந்திருந்த எஸ்ஐ பாலு, இந்த விபத்தில் உயிரிழந்தார். பொன்.சுப்பையா காயமடைந்தார்.

மேலும் படிக்க...பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்...

தலைமறைவாக உள்ள முருகவேலை 10 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கொலை நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் முருகவேல் சரண் அடைந்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: