ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த பூவரசன்

மர்மமான முறையில் இறந்து கிடந்த பூவரசன்

Poovarasan Murder | திருவள்ளூர் அடுத்த மூலக்கரை  பகுதியில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட புங்கத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் ( வயது 24). இவர் அப்பகுதியில் உள்ள  தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பூவரசனுக்கு  திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.  பூவரசன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன்  ராமதண்டலம் என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

  இந்நிலையில்  அவரது மைத்துனர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கிராமத்தில் உள்ள வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் மூலக்கரை என்ற பகுதியில் ரத்த வெள்ளத்தில் இளைஞர்  ஒருவர் இறந்து கிடப்பதாக   பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

  ReadMore : வளையல் பெட்டியில் போதைப் பொருள்.. ஆஸ்திரேலியாவுக்கு கூரியரில் கடத்தல்.. பகீர் கும்பலின் பின்னணி என்ன?

  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்தது பூவரசன் என்பது தெரியவந்தது.  இளைஞர் பூவரசன் விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது.. ஆனால் பூவரசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் இவரை  வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் அடித்துக்கொலை செய்து வீசி சென்றார்களா என்று  காவல்துறைரயினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: பார்த்தசாரதி

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Crime News, Murder case, Thiruvallur