முகநூல் மூலம் பழகி பழைய கல்லூரி தோழிக்கு அவரது கனவரிடம் விவாகரத்து வாங்கி தருவதாக கூறி ரூபாய் 14 லட்சம் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தனியார் கட்டுமான நிறுவன பொறியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு, சிவப்பிரகாசம் நகர், வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (32). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் திவாகர். இவர்கள் இருவரும் 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிக்கு 8 வயதில் மகள் உள்ளார். இதற்கிடையில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தனது கணவர் திவாகருடன் லட்சுமி பிரியாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் திவாகரை பிரிந்து வசித்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, இவருக்கு, முகநூல் மூலமாக தன்னுடன் ஒரே கல்லூரியில் படித்த புழல், இந்திரா நகரை சேர்ந்த பொறியாளர் மதன்குமார் (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.அப்போது லட்சுமி பிரியா, தனது கணவர் திவாகரனை விவாகரத்து செய்ய உதவிட வேண்டும் என மதன்குமாரிடம் உதவிகேட்டுள்ளார்.
Also Read: இறந்தவர் தனது தந்தை என தெரியாமல் சடலத்தை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்
அப்போது, அவர் தனது தந்தை பிச்சைமணி, புழல் சிறையில் துணை ஜெயிலராக பணியாற்றி இறந்து விட்டதாகவும், அதனை தொடர்ந்து நான் அங்கு காவல்துறை ஊழியராக பணியாற்றி வருவதாக போலியான அடையாள அட்டையை காண்பித்து உள்ளார். மேலும், அவர் தனக்கு தெரிந்த பிரபல வழக்கறிஞர் மூலம் விவகாரத்திற்கு ஏற்பாடு செய்வதாக லட்சுமிபிரியா விடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, மதன்குமாரின் பேச்சை நம்பி விவகாரத்து வழக்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொண்டார். மேலும், அவர் பல தவணையாக லட்சுமி பிரியாவிடம் சிறிது சிறிதாக வழக்கு செலவிற்கு ரூ. 13 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.
அதன் பிறகு, விவாகரத்து வழக்கு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் தான் மதன்குமாரால் தான் ஏமாற்றுவதை லட்சுமிபிரியா அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மதன்குமாரிடம் இதுவரை கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது, அவர் லெட்சுமிபிரியாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். லட்சுமி பிரியா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அம்பத்தூர் காவல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த மதன்குமாரை நேற்று பிடித்தனர்.
Also Read: தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக் - அதிர்ச்சி தகவல்!!
பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர். அதில், அவர் புழல் சிறையில் பணி செய்யவில்லை என்பதும், அவர் வைத்து இருந்தது போலி அடையாள அட்டை என்பதும், அவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. பின்னர், போலீசார் மதன்குமாரை நேற்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: கன்னியப்பன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.