கடலூரில் அரசு பேருந்தை மறித்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மீது படுத்துக் கொண்டு டிக்டாக்கில் திறமை காட்டிய இளைஞர் காவல்துறையினரிடம் வசமாக சிக்கி உள்ளார்.
டிக்டாக்-கில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு திட்டகுடி பகுதியில் சாலையில் நின்ற பேருந்தை மறித்து தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதில் படுத்துக் கொண்டு ”என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...” என்ற பாடலுக்கு டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் வைரலான நிலையில், இதை பார்த்து மற்ற இளைஞர்களும் இது போல செய்ய தொடங்கி விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஆபினவ், சம்பந்தப்பட்ட டிக்டாக் இளைஞரை பிடிக்க உத்தரவிட்டார்.
தன்னுடைய இரு சக்கரவாகனத்தில் டிக்டாக் செய்தபடியே கெத்தாக சுற்றிவந்த இளைஞர் அஜீத்தை, இருசக்கர வாகனத்துடன் கொத்தாக தூக்கிச்சென்றனர் ராமநத்தம் காவல்துறையினர். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அஜீத்குமார் விசாரத்தினர்.
அதிகமாக மக்களை கவர்வதற்காக டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட, அஜீத் மீது இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் இதற்கு முன்பும் இது போல விபரீத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஒரு சிறுவன் முன்னிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு கொள்வதை போல டிக்டாக் செய்துள்ளார். இவரது குடும்பத்தினர் உதவியுடன் பச்சிளம் குழந்தையை பாயில் படுக்க வைத்து, அதற்கு மேலே ஆபத்தை விளைவிக்கும் வகையில் கயிற்றில் தொங்கியபடி விபரீத டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதே போல் பல டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்டுள்ளார்.
மேலும், அஜீத்தை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்துள்ளனர்.
Published by:Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.