Home /News /tamil-nadu /

மாடலிங் பெண்ணுக்கு ஈவெண்ட் மேனேஜர் கொடுத்த டார்ச்சர் - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

மாடலிங் பெண்ணுக்கு ஈவெண்ட் மேனேஜர் கொடுத்த டார்ச்சர் - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையென்றால் இந்தப்புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதாக கூறி ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

    சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்குரஞ்சித் என்பவர் செல்போன் வாயிலாக அறிமுகமாகியுள்ளார். Event manager தொழில் செய்வதாக கூறி  அந்தப்பெண்ணிடம் நட்பாக பேசி பழகி வந்துள்ளார். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சினிமா கதையும் கூறியுள்ளார். ரஞ்சித் அடிக்கடி அந்தப் பெண்ணை தொடர்புக்கொண்டு தொந்தரவு செய்துள்ளார். அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். ரஞ்சித் பலமுறை முயற்சித்தும் அவரது அழைப்பை அந்தப்பெண் எடுக்கவில்லை.

    Also Read: மாஸ் அருள்வாக்குக்கு திட்டம் போட்ட அன்னபூரணி அம்மா.. கட்டம்கட்டிய போலீஸ்

    இதற்கிடையில் தீக்‌ஷ்குப்தா என்ற பெண் வாட்ஸ் மூலம் அந்தப்பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். தானும் மாடலிங் துறையில் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை கேட்டு பெற்றுள்ளார். அந்தப்பெண்ணும் ஒரே துறையில் தானே இருக்கிறோம் என்று நம்பி  இவருடைய புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இந்நிலையில் இவர் அனுப்பிய புகைப்படங்கள் எல்லாம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு அவரது மொபைல் போனுக்கு வந்துள்ளது. இதனைக்கண்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    தீக்‌ஷ்குப்தா என்ற பெயரில் ரஞ்சித் தான் வேறொரு தொலைப்பேசி எண் மூலம் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் அந்தப்பெண்ணை தொடர்புக்கொண்ட ரஞ்சித் என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையென்றால் இந்தப்புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

    Also Read: நாமக்கல் நூல் மில்லில் வடமாநில இளம்பெண் கொலை.. காதலன் கவலைக்கிடம்

    இதனையடுத்து அந்தப்பெண் நடந்தவற்றை தன் தந்தையிடம் கூறியுள்ளார். உடனே அவரது தந்தை கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 26) என்ற நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 செல்போனை பறிமுதல் செய்தனர்.

    போலீஸாரின் விசாரணையில் ரஞ்சித் சென்னை பெரும்பாக்கம் பகுதியில் தங்கி Event Manager தொழில் செய்து வந்தது தெரியவந்தது.  விசாரணைக்கு பின்னர் ரஞ்சித்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Arrest, Cheating, Cheating case, Crime | குற்றச் செய்திகள், Photos

    அடுத்த செய்தி