Home /News /tamil-nadu /

காதலிக்க மறுத்த பெண்ணின் பெயரில் போலி கணக்கை துவக்கி ஆபாச படங்கள் பதிவேற்றம்: இளைஞர் கைது

காதலிக்க மறுத்த பெண்ணின் பெயரில் போலி கணக்கை துவக்கி ஆபாச படங்கள் பதிவேற்றம்: இளைஞர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷுக்கும் அப்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பின்னர் தன்னை காதலிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் அப்பெண் ராஜேஷூடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கை தொடங்கிய நபர்,பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றியுள்ளார். இது தொடர்பான புகாரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணின் ஆபாச படம் தொடர்ந்து இன்டாகிராமில் வலம் வருதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அடையாறு சைபர் க்ரைம் குழுவின் உதவியோடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக, திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(30) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷுக்கும் அப்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பின்னர் தன்னை காதலிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் அப்பெண் ராஜேஷூடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் அப்பெண்ணின் பெயரில் போலியான கணக்கு ஒன்றை துவங்கி அப்பெண்ணின் படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்து வந்துள்ளது  விசாரணையில் தெரியவந்தது.  அதன்பேரில் ராஜேஷிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: விநோத் கண்ணன்

    இதையும் படிங்க: கல்லூரிகளுக்கு ஜனவரி 20ம் தேதிவரை விடுமுறை: தமிழக அரசு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Instagram

    அடுத்த செய்தி