'நான் அவன் இல்லை' பட பாணியில் சம்பவம் - பெண்களை ஏமாற்றும் மோசடி மன்னன் சிக்கியது எப்படி?

சென்னையில் நான் அவனில்லை பட பாணியில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட பொறியாளரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். 

'நான் அவன் இல்லை' பட பாணியில் சம்பவம் - பெண்களை ஏமாற்றும் மோசடி மன்னன் சிக்கியது எப்படி?
  • Share this:
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் 36 வயதான ராகேஷ் சர்மா பொறியியல் பட்டதாரி. கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணிடம், திருமண தகவல் மையம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.

அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அவர், அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஐந்தரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 சவரன் நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது. அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த இளம்பெண், தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இது குறித்து இளம்பெண்ணின் தந்தை கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகேஷ் சர்மா குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட ராகேஷ் சர்மா, 2 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் எனக்கேட்டுள்ளார்.


போலீசார் அறிவுறுத்தல்படி, மாதவரம் ரவுண்டானா அருகே வந்து பணத்தை வாங்கி கொள்ளும்படி அந்த பெண் கூறியுள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை இரவு அங்கு அந்த பெண்ணுடன் சென்ற போலீசார், மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது இளம்பெண்ணிடம் பணம் வாங்க வந்த ராகேஷ் சர்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.ராகேஷ் சர்மா ஏற்கெனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கத்தாரில் வேலை பார்த்து வந்த அவர் நான் அவனில்லை படத்தை பார்த்து திருமண மோசடியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தைகள் கூறி வலை வீசி உள்ளார். அதில் சிக்கிய பெண்களை ஏமாற்றி நான் அவனில்லை பட பாணியில் பணம், நகைகளை பறித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இது போல் சென்னை உட்பட பல பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராகேஷ் சர்மாவிடம் ஏமாந்த பெண்கள் முன்வந்து புகார் அளித்தால், அவர்கள் இழந்த பணம், நகைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிக்கும் பெண்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading