Home /News /tamil-nadu /

பண்ணை வீட்டில் மூதாட்டி இறந்த வழக்கில் திடீர் திருப்பம்.. பணத்திற்காக அடித்துக்கொன்ற இளைஞர்

பண்ணை வீட்டில் மூதாட்டி இறந்த வழக்கில் திடீர் திருப்பம்.. பணத்திற்காக அடித்துக்கொன்ற இளைஞர்

கள்ளக்குறிச்சி கொலை வழக்கு

கள்ளக்குறிச்சி கொலை வழக்கு

Kallakurichi | பண்ணை வீட்டில் மூதாட்டியை அடித்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பணத்திற்காக அடித்துக் கொலை செய்ததாக அதே ஊரை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கைது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தகரை வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் - பாப்பு தம்பதியினர் வசித்து வந்துள்ள நிலையில் செங்கோட்டையனின் மகனுக்கு வரும் மார்ச் 20ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதற்காக செங்கோட்டையன் வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    Also Read: செக்ஸ் வலையில் சிக்கும் தொழிலதிபர்களை வீடியோ எடுத்து மிரட்டும் சொப்பன சுந்தரி.. பயந்து வாய் திறக்காத 'மன்மத ராசாக்கள்'! - திருச்சியை அதிரவைத்த சம்பவம்

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பாப்பு என்ற 58 வயதுடைய மூதாட்டியை மர்ம நபர்கள் பலத்த ஆயுதங்களைக் கொண்டு அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். என செங்கோட்டையன் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் துப்புத் துலக்கிய போலீசார்  செங்கோட்டையனின் வீட்டில் வேலை செய்து வருபரின் மகனான கார்த்திக் என்பவர் மீது சந்தேகம் அடைந்து அவனது கைப்பேசி அழைப்புகளை ஆய்வு மேற்கொண்டதினலும் மோப்ப நாய் குற்றவாளி சென்ற இடங்களை கண்டறிந்தாலும் குற்றவாளியை உறுதி செய்தனர்.

    போலீசார் விசாரணை மேற்கொண்ட இடத்திலேயே சகஜமாக நின்றுகொண்டிருந்த கார்த்திக்கிற்கு சந்தேகம் வராமலும் அங்கிருந்து அவன் தப்பி செல்லாமலும் இருப்பதற்காக அவனுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். முழுமையான ஆதாரங்கள் கிடைத்தவுடன்  அவனை சின்னசேலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், “ கார்த்திக்  தனது தந்தையுடன் அவ்வப்பொழுது செங்கோட்டையனின் நிலத்திலுள்ள விவசாய பணிகளுக்காக அவர்களது வீட்டிற்கு சென்று வந்ததும் இதனால் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களிடம் தனது தேவைகளுக்காக கடன் பெற்றதும் தெரியவந்தது.

    Also Read: ஆபாசமாக பேசி மிரட்டல்.. இயக்குநர் மீது இசையமைப்பாளர் புகார்

    இதேபோல் பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ள கார்த்திக்கிற்கு பணத் தேவைகள் ஏற்படவே மீண்டும் செங்கோட்டையன் பாப்பு ஆகியோரிடம் கடன் கேட்டதாகவும் அதற்கு அவர்கள் கடன் தர மறுத்ததாகவும் கூறியுள்ளான் . மேலும் சம்பவம் நடந்த ஐந்தாம் தேதி வீட்டில் தனியாக இருந்த பாப்புவிடம் மீண்டும் சென்று பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த கார்த்திக் அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்திற்காக பாப்புவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்று அருகில் உள்ள ஏரிக்கரையில் மறைத்து வைத்த்துள்ளர்.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நகை மற்றும் பணத்தை கைப்பற்றி மூதாட்டியை அடித்து கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 10 மணி நேரத்தில் விரைந்து சாதுரியமாக குற்றவாளியை கைது செய்த போலீசாரையும், கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பெரிதும் பங்காற்றிய மோப்ப நாய் ராக்கி குழுவினரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் பாராட்டி சான்றிதழ் சான்றிதழ்களை வழங்கினார்.

    செய்தியாளர்: எஸ் .செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Kallakurichi, Money, Murder

    அடுத்த செய்தி