கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது!

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவியை பாலியல் கொடுமைப்படுத்தி திருமணத்துக்கு வற்புறுத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்..

  மயிலாடுதுறை அருகே 17 வயது கல்லூரி மாணவியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய வாலிபரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

  மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வாலிபர் ஒருவர் தனது உறவினர் வீட்டில் 18 வயது நிரம்பாத கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாக குழந்தைகள் நல இலவச அழைப்பு எண்ணிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ரம்யா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதில், 17 வயது கல்லூரி மாணவியை சீர்காழி தாலுகா கொண்டத்தூரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் (20) என்பவர் கடத்தி வந்து உறவினர் வீட்டில் தங்கவைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் அந்த பெண்ணை மீட்டதுடன் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  மயிலாடுதுறை செய்தியாளர் கிருஷ்ணகுமார்
  Published by:Arun
  First published: