நீலகிரியில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ வைரல்... கைதான இளைஞர்...

Youtube Video

நீலகிரி மாவட்டம் குன்னூரில், பள்ளி மாணவி ஒருவருக்கு இளைஞர் தாலி கட்டிய வீடியோ பரவிய நிலையில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு கழித்து போலீசார் நடவடிக்கை எடுத்தது ஏன்?

 • Share this:


  நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வேகமாகப் பரவியது. குன்னூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் கோவிலின் மறைவான இடத்தில் வைத்து தாலி கட்டும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. தகவல் அறிந்த மாவட்ட சமூக நலத்துறையினர் இதுகுறித்து குன்னூர் போலீசாரிடம் புகாரளித்தனர்.

  முதற்கட்ட விசாரணையில், வீடியோவில் உள்ள இளைஞர், குன்னூர் சட்டன் பகுதியை சேர்ந்த 23 வயதான கவுதம் என்ற கிறி்ஸ்டோபர் என்பது தெரியவந்தது. கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்த இளைஞரைப் போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

  அதில், இந்த வீடியோ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், தற்போது எப்படி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது எனத் தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் அந்த மாணவியின் தந்தை அப்போதே மாணவியை நாமக்கல்லுக்கு அழைத்து சென்று விட்டார் எனவும் கவுதம் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க.... இந்தியாவில் 2-ம் கட்ட கொரோனா பரவல்... இந்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு...

  இதையடுத்து, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் கவுதமை குன்னூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல்லில் உள்ள மாணவியை மீட்டு காப்பகத்தில் தங்க வைக்கவும் சமூகநலத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

  15 வயது பள்ளி மாணவியை ஓராண்டிற்கு முன்பு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்த இளைஞர், வீடியோ வெளியானதால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: