மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பரப்பிய இளைஞர் போக்சோவில் கைது..

Youtube Video

சென்னையில் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டகிராமில் பதிவேற்றிய என்ஜினியரிங் மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 • Share this:
  சென்னை ராயப்பேட்டையை பகுதியை சேர்ந்தவர் அந்த 17 வயது மாணவி , Fashion Technology படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் ஆர்வமாக பயன்படுத்தும் மாணவிக்கு, சிலநாட்களுக்கு முன்பு ஒருநபர் தொடர்பு கொண்டுள்ளார். முதலில் மாணவியிடம் நட்பாக பேசியவர் திடீரென ஒருநாள் மாணவியின் முகத்துடன் ஆபாசமான உடல் பகுதியை இணைத்து சித்தரிக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன் மாணவியின் ஆபாசபடத்தை அந்த நபர் தனது பக்கத்திலும் பதிவேற்றம் செய்யுள்ளார். இதனால் அதிர்சியடைந்த மாணவி சம்பவம் தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

  மாணவியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்த ஐபி முகவரி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  அதில் மாணவியை ஆபாசமாக சித்தரித்து படத்தை வெளியிட்டவர் ,சேலம் மாவட்டம் அஷ்தம்பட்டியைச் சேர்ந்த மாணவியின் உறவினரான 19 வயது பரசுராமன் தான் என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். பரசுராமனை பிடித்த போலீசார் அவரின் செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணையை தொடங்கினர்.

  பரசுராமன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்து வருகின்றார். உறவினரான இந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டகிராமில் முன்னதாக தன்னுடைய படங்களை அனுப்பி பழக பரசுராமன் முயன்றுள்ளார். ஆனால், மாணவி கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் போலியான கணக்கு ஒன்றை தொடங்கி அதன் மூலமாக மாணவிக்கு ஆபாசபடங்களை அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.

  மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்ததில்மார்பிங் செய்வதற்காக செயலி ஒன்றை வைத்து கொண்டு , பல பெண்களின் படத்தை மார்பிங் செய்து ரசித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ராயப்பேட்டை மகளிர் போலீசார் மேல்விசாரணைக்காக சைபர் லேப்பிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  மேலும் படிக்க...உதவித் தொகையை உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

  போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பரசுராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். குடும்பத்துடன் நல்லதொடர்பில் இருந்த உறவுக்கார மாணவியையே இளைஞர் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: