திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாட்டிலும், மீன்பிடிக்கும் செயலிலும் இளைஞர்கள் ஈடுபட்டனர். ஊர் சுற்றிய வாகனங்கள் பறிமுதல் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தவர் கைது 280 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அனுசரிக்கப்பட்டது. சாலையில் வாகனங்களின் நடமாட்டம் இன்றி முழுதும் வெறிச்சோடி காணப்பட்டன உரிய காரணங்கள் இன்றி சாலையில் சுற்றித்திரிந்த வாகனங்களை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்து ஆவணங்களை அனுமதி கடிதம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து முறையான காரணங்களால் வெளியே வந்தவர்களை அனுமதித்தனர் ஊரை சுற்றிய வாகன ஓட்டிகளை எச்சரித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி பகுதியில், அங்குள்ள இளைஞர்கள் ஊரடங்கை ஒரு பொருட்டாக கருதாமல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டனர். அதே போன்று அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் இன்று முழுஅடைப்பு என்பதால் தங்களது மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஆரணி ஆற்றுக்குச் சென்று வலைவீசி தேங்கியிருந்த குட்டையில் மீன் பிடித்தனர்.
ஊரடங்கு என்பதால் ஓட்டல்கள் வணிக வளாகங்கள் சிறு கடைகள் டீ கடைகள் என எந்த ஒரு உணவகங்களும் இல்லாததால் சாலையோரம் வசிப்பவர்கள் பிச்சைக்காரர்கள் உண்பதற்கு உணவு இன்றி தவித்தனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவுகளை சமைத்து வழங்கினர். இந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு காரணமாக அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் பொன்னேரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கல்பனா தலைமையிலான போலீசார் பொன்னேரி அருகே உள்ள கோளூர் பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்த மணிகண்டன் 20 வயது என்ற இளைஞரை கைது செய்து அவரிடமிருந்து 7 பெட்டிகளில் அடைக்கப்பட்டு இருந்த 250 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
பார்த்தசாரதி - திருவள்ளூர் செய்தியாளர்
Published by:Arun
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.