மாற்று வழியில் சென்ற அரசுப் பேருந்து! வழி மறித்து ஓட்டுநரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிய வாங்கிய இளைஞர்கள்

கடலூரில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து, களிஞ்சிக்குப்பம் கிராமத்திற்கு பயணிகளை ஏற்றி செல்லாமல் மாற்று வழியாக பக்கத்து ஊரான சொர்ணாவூர் வழியாக சிறுவந்தாடுக்கு சென்றுள்ளது.

news18
Updated: August 13, 2019, 10:47 PM IST
மாற்று வழியில் சென்ற அரசுப் பேருந்து! வழி மறித்து ஓட்டுநரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிய வாங்கிய இளைஞர்கள்
அரசுப் பேருந்து சிறை பிடிப்பு
news18
Updated: August 13, 2019, 10:47 PM IST
கடலூர் அருகே மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் அரசு பேருந்தை கிராம இளைஞர்கள் சிறைபிடித்து ஓட்டுநரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் வழியாக விழுப்புரம் மாவட்டம் களிஞ்சிக்குப்பம் கிராமம் வழியாக சிறுவந்தாடு கிராமத்துக்கு தினந்தோறும் காலையில் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கடலூரில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து, களிஞ்சிக்குப்பம் கிராமத்திற்கு பயணிகளை ஏற்றி செல்லாமல் மாற்று வழியாக பக்கத்து ஊரான சொர்ணாவூர் வழியாக சிறுவந்தாடுக்கு சென்றுள்ளது.

இதன் பின்னர் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் அந்த பேருந்து சொர்ணாவூர் வழியாக கடலூருக்கு புறப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் களிஞ்சிக்குப்பம் கி்ராமத்து இளைஞர்கள் ஒன்று திரண்டு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டிற்கு சென்றனர். அப்போது சொர்ணாவூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தை, களிஞ்சிக்குப்பம் கிராம இளைஞர்கள் சிறைபிடித்து ஏன் தங்கள் கிராமத்திற்கு வரவில்லை என கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு ஓட்டுநர் இன்று அரசு விடுமுறை என்பதால் தங்கள் கிராமத்துக்கு வரவில்லை என கூறியுள்ளார். அப்போது கிராமத்து இளைஞர்கள், எங்களது ஊருக்கு தினமும் அரசு பேருந்து வந்து செல்லும் என உத்தரவாதம் அளித்தால்தான் பேருந்தை விடுவிப்போம் என்றும், கிராமத்துக்குள் பேருந்து வராத காரணத்தை தெளிவாக கூறி மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றனர்.

இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் கவியரசன் ஒரு கடிதம் எழுதி கொடுத்தார். அந்தக் கடிதத்தில், பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் களிஞ்சிக்குப்பம் கிராமத்திற்குள் செல்லவில்லை. வரும் காலங்களில் தினமும் கிராமத்துக்குள் பேருந்தை இயக்குவேன் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த ஒரு முறை மட்டும் மன்னிக்குமாறு டிரைவர், கிராம இளைஞரிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கிராம இளைஞர்கள் பேருந்தை விடுவித்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also see:

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...