Home /News /tamil-nadu /

ஆன்லைன் வகுப்புகள் அதிகரிப்பால் இணையதள பயன்பாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்கள்.. மீட்டெடுக்கும் பிரத்யேக மையங்கள்

ஆன்லைன் வகுப்புகள் அதிகரிப்பால் இணையதள பயன்பாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்கள்.. மீட்டெடுக்கும் பிரத்யேக மையங்கள்

ஆன்லைன் வகுப்புகள் அதிகரிப்பால் இணையதள பயன்பாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்கள்..

ஆன்லைன் வகுப்புகள் அதிகரிப்பால் இணையதள பயன்பாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்கள்..

படிப்பிலோ விளையாட்டிலோ வெற்றியடைய முயற்சி செய்ய வேண்டும், அதற்கு காலம் எடுக்கும். ஆனால் செல்போனில் உடனடியாக மகிழ்ச்சி கிடைக்கிறது, அடுத்தடுத்த கட்டங்களுக்கு வெற்றி பெற்று செல்கின்றனர்.

இன்றைய காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு இன்றியமையாதது ஆகிறது. ஆனால் அதற்கு அடிமையாகும் அளவு நம் வாழ்வில் இணையதளத்துக்கு இடம் கொடுத்தால் அது நம் உடல், மன நலத்துக்கு கேடு விளைவிக்கிறது. இந்த பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வை தர மருத்துவ உலகமும் தயாராகி உள்ளது என்பதற்கு உதாரணம் தான் இணையதள பயன்பாட்டுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க செயல்படும் பிரத்யேக மையங்கள்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியில் இதற்காக தமிழகத்தில் முதல் கிளினிக் செயல்பட்டு வருகிறது. இதில் 67 பேருக்கு இதுவரை சிகிச்சை வழங்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இங்கு வருபவர்கள் பெரும்பாலும் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் உள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு மாணவர்களிடையே செல்போன் பயன்பாடும் இணையதள பயன்பாடும் அதிகரித்துள்ளது. இவை சிலரை இணையதள பயன்பாட்டுக்கு அடிமையாக்கிவிட்டுள்ளது.

தான் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் பயன்படுத்தும் போது பாடங்களை கவனிக்காமல் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதாக மாணவர் ஒருவர் தெரிவிக்கிறார். இதனால் தன் தூக்கத்தை இழந்து தலைவலி உடல்சோர்வு உள்ளிட்டவை ஏற்படதாகவும் தெரிவிக்கிறார்.

மாணவி ஒருவர் தான் 10 முதல் 12 மணி நேரம் ஒரு நாளுக்கு செல்போன் பயன்படுத்தியதாகவும், சமூக ஊடகங்களில் பிறரது வாழ்க்கையை பற்றிய தகவல்களை பார்ப்பது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். இந்த கிளினிக்கில் பெற்ற சிகிசச்சையில் தற்போது நேரத்தை முறையாக பயன்படுத்துவதாக கூறுகிறார்.

Also Read : தீபாவளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வாழ்த்து கூறுவதில்லை? - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

தமிழ்நாடு அரசின் உத்தரவின் பெயரில் இந்த கிளினிக் ஆறு மாதங்களாக இயங்கி வருகிறது.  படிக்க வேண்டிய நேரத்தில் படிக்காமல் வேறு ஏதோ பார்க்கிறார்கள் என பதட்டத்துடன் பெற்றோர்கள் பிள்ளைகளை கொண்டு வருகிறார்கள். முதலில் பெற்றோர்களுக்கான பதட்டத்தை குறைத்து பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிப்போம் என மருத்துவர் மலர் மோசஸ், துறைத் தலைவர், மனநல மருத்துவம், ஓமந்தூரார் மருத்துவமனை கூறுகிறார்.

செல்போனில் விளையாடும் போது, அதில் பொய்யான மகிழ்ச்சி மாணவர்களுக்கு கிடைக்கிறது. படிப்பிலோ விளையாட்டிலோ வெற்றியடைய முயற்சி செய்ய வேண்டும், அதற்கு காலம் எடுக்கும். ஆனால் செல்போனில் உடனடியாக மகிழ்ச்சி கிடைக்கிறது, அடுத்தடுத்த கட்டங்களுக்கு வெற்றி பெற்று செல்கின்றனர். இதனை புரிய வைத்து, இதை விட மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்கிறார் மனநலத்துறை உதவி பேராசிரியர் அனுபமா.

ஒரு மாணவர் freefire ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இரவு தூக்கத்தில் அந்த விளையாட்டில் வருவது போல ஒருவர் தன்னை தாக்குவதுபோலவும் அதனால் தான் சுடப்பட்டது போலவும் அலறியதை கேட்டு   பெற்றோர்கள் பயந்து போய் பிள்ளையை அழைத்து வந்தனர். மற்றொரு மாணவர் செல்போன் கேம்.விளையாடுவது போல எப்போதும் தன் விரல்களை தன்னை அறியாமலேயே எப்போதும் அசைத்துக் கொண்டிருந்தார். இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இங்கு வரும் நபர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது என மதிப்பீடு செய்கிறோம். பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவர்களுக்கு முதலில் உணர்த்தி, அதிலிருந்து மீள பல்வேறு சிகிச்சைகள் வழங்குகிறோம். எவ்வளவு நேரம் செல்போனில் செலவிடுகிறார்கள் அவர்களையே கண்காணிக்க சொல்கிறோம். இதிலிருந்து மீண்டவர்கள் அனுபவங்களை கேட்க வைக்கிறோம். மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் வழங்குகிறோம்.
Published by:Esakki Raja
First published:

Tags: Online class

அடுத்த செய்தி