ரூ.15,000 பணத்துக்காக நண்பனையே கொலை செய்த கொடூரம் - 3 பேர் கைது

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பகுதியில் நிசார் அகமது என்பவர் நேற்று காலை 11 மணிக்கு வெட்டிக்கொலை கொலை செய்யப்பட்டார்.

ரூ.15,000 பணத்துக்காக நண்பனையே கொலை செய்த கொடூரம் - 3 பேர் கைது
மாதிரிப்படம்
  • Share this:
விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி 3 பேரை இவ்வழக்கில் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் நண்பர்களான சின்ன கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த குமரேசன், அப்பு மற்றும் முகமது ஷாஜகான் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

கேரளாவில் ஓட்டலில் பணியாற்றி வந்த நிசார், தான் சம்பாதித்த 15,000 ரூபாயை தனது நண்பர்களுக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தைத் திருப்பித் தராவிட்டால் பிரச்னை பெரிதாகும் என நிசார் தொலைபேசியில் மிரட்டியுள்ளார். இதனால் அவரைக் கொல்ல முடிவுசெய்த 3 பேரும் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவரை சமரச நகருக்கு நேற்று காலை வரவழைத்தனர்.

அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நிசாரை அப்பு, ஷாஜகான் ஆகியோர் விரட்டிக் கொன்றனர். நிசார் எடுத்து வந்த இரு சக்கர வாகனத்தை குமரேசன் தயாராக வைக்க 3 பேரும் தப்பிச் சென்றனர். இவர்கள் அனைவரும் சின்ன கோட்டக்குப்பம் கிராமத்தில் முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படையினர், அங்கு விரைந்து சென்று இன்று காலை அவர்களைக் கைது செய்தனர்.


கொலை நடந்த 3 மணி நேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி கவுரவித்தார்.

இவ்வழக்கில் கைதானவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பியபோது அப்பு மற்றும் ஷாஜகான் இருவரின் கை முறிந்ததால் கட்டுபோடப்பட்டிருந்தனர். கஞ்சா விவகாரத்தால் இந்தக் கொலை நடக்கவில்லை என தெரிவித்த எஸ்பி ஜெயக்குமார், கோட்டக்குப்பம், மரக்காணம் பகுதிகளில் கஞ்சா விற்பதைத் தடுக்க ஒரு மாதமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கஞ்சா விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும் எச்சரித்தார்.
Also see:
First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading