வீட்டு வேலை செய்யவில்லை என கடிந்து கொண்ட தாய்... இளம்பெண் தற்கொலை

கோப்பு படம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் சவேரியார் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்; கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் 20 வயதான சந்தியா. இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார்.

  செவ்வாய் மாலை வீட்டில் தனியாக இருந்த சந்தியா திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வீட்டினுள்ளே சென்று அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

  மீட்கும்போதே 90 சதவீத தீக்காயங்களுடன் இருந்த சந்தியா, உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய் பிற்பகலில் உயிரிழந்தார்; அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததால் போலீசாரால் வாக்குமூலம் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

  வந்தவாசி போலீசார் சந்தியாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதில், சந்தியாவின் தாய், அவரை வீட்டு வேலைகள் செய்யாதது குறித்து கடிந்து கொண்டதாகவும் அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. எனினும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Sankaravadivoo G
  First published: