திருவண்ணாமலையில் வரதட்சணை கொடுமையால் 7 வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இளம் பெண்ணின் குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த சு. ஆண்டாபாட்டு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா. இவரும் செங்கம் அடுத்துள்ள பெரியகஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் 7 ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். பின்பு இருவர் வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதன்பின் புஷ்பா மற்றும் விவேகானந்தன் தம்பதியினர், விவேகானந்தன் பெரிய கஸ்தம்பாடி கிராமத்திலுள்ள விவேகானந்தனின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
விவேகானந்தன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வருவதாக அவரின் தங்கையான விஜயலக்ஷ்மியிடம் பலமுறை புஷ்பா தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனை தொடர்பாக சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த புஷ்பா தனது கணவர் விவேகானந்தன் வீட்டில் தூக்கு போட்டு இறந்துள்ளார். அதன்பின் விவேகானந்தன் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கே பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த புஷ்பா உறவினர்கள், புஷ்பா மரணத்திற்கு காரணமான விவேகானந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்ய கோரியும், வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த புஷ்பாவிற்கு நீதி கேட்டும், தற்கொலையா அல்லது கொலையா என காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தக் கோரி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Must Read : கறிவிருந்து கச்சேரி.. திருச்சி சிவாவின் தடபுடல் பிறந்தநாள் கொண்டாட்டம் - உள்ளூர் அரசியலுக்கு அஸ்திவாரமா?
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருவண்ணாமலை காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளி மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் விரைவில் கைது செய்து விடுவோம் என்றும் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

உறவினர்கள் சாலை மறியல்
இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் - அ.சதிஷ், திருவண்ணாமலை.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உங்கள் நகரத்திலிருந்து(Tiruvannamalai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.