தஞ்சாவூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை சரமாரியாக வெட்டிய இளைஞர்...

கோப்புப் படம்

தஞ்சையில் காதலிக்க மறுத்த கல்லூரி பெண்ணை பேருந்தில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

 • Share this:
  தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான அந்த பெண். இவர் தஞ்சையில் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான அஜித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாள் பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது.

  ஓரிரு மாதங்கள் காதலர்களாக இருவரும் இருந்த நிலையில், அஜித்தின் உண்மை முகம் மாணவிக்குத் தெரியவந்தது. மதுவிற்கு அடிமையான அஜித் முறையாக வேலைக்குச் செல்லாமல் ஊர்சுற்றிவந்துள்ளார். மேலும் அடிதடி சம்பவங்களிலும் அஜித் ஈடுபட்டு வந்ததால் மாணவி அஜித்தின் காதலை முறித்து கொண்டுள்ளார்.

  ஆனால் மாணவியை விடாத அஜித் அவரை தினமும் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை மாணவி வழக்கம் போல் பேருந்தில் கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பேருந்தில் ஏறிய அஜித் மாணவியிடம் தகறாரில் ஈடுப்பட்டுள்ளார். மாணவி அஜித்திடம் பேசமறுக்கவே அஜித் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

  Also read: மணமகனின் நண்பர்கள் செய்த சேட்டையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

  ஒரு கட்டத்தில் அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியள்ளார். இதில் மாணவியின் கழுத்தில் அழமான வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டத்தொடங்கியுள்ளது. இதில் நிலைத்தடுமாறிய மாணவி பேருந்திலேயே மயங்கி சரிந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அஜித்தைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  கழுத்தில் படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மாணவியைத் தாக்கிய அஜித்தைக் கைதுசெய்த தஞ்சை நகர தெற்கு போலீசார், அவரை விசாரித்து வருகின்றனர். ஓடும் பேருந்தில் காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் கத்தியால் கழுத்தை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: