பல் குத்தும் மரக்குச்சிகளை கொண்டு கலைவடிவம் செய்து அசத்தும் இளைஞர்...

பல் குத்தும் மரக்குச்சிகளை கொண்டு கலைவடிவம் செய்து அசத்தும் இளைஞர்...

தாஜ்மஹால்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், பல் குத்தும் குச்சிகள் மூலம் கலை வடிவங்களை உருவாக்கி அசத்தி வருகிறார்.

  • Share this:
    பழவேற்காடு, நடுவூர் மாதா குப்பத்தைச் சேர்ந்த ஆரோக்கியம் - கிரஸ் மேரி தம்பதியின் மகன் பினு சாஜன். இளநிலை வேதியியல் பட்டதாரியான இவருக்கு, ஸ்டிக் ஆர்ட் எனப்படும் சிறு சிறு மரக்குச்சிகளைக் கொண்டு வடிவங்களைப் படைக்கும் கலை மீது 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. முதன்முதலில் உள்ளூர் தேவாலயத்தில் உள்ள மாதா சிலையை இவர் வடிவமைக்க, அதற்கு அக்கம்பக்கத்தினர் அளித்த வரவேற்பு, அடுத்தடுத்து பல்வேறு படைப்புகளை உருவாக்க வைத்துள்ளது. இன்று பினு ஷாஜன் கைவண்ணத்தில், தாஜ்மகால், பைசா கோபுரம், உலகில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனம், மிதிவண்டி, நீராவி ரயில் எஞ்ஜின், டச்சு காலத்து கப்பல்கள் ஆகியவை உருவாகியுள்ளன.

    ஒவ்வொரு படைப்புக்கும் 10000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை செலவு பிடிப்பதாகவும் இரண்டு மாதம் முதல் மூன்று மாங்கள் வரை ஆவதாகவும் கூறும் பினுவிற்கு, அவரது தந்தை ஆரோக்கியம் பக்க பலமாக இருக்கிறார். இதேபோல, மகனின் கலை ஆர்வத்திற்கு தடை போடாமல், தையல் தொழில் மூலம் குடும்பத்தை தாங்கி வருகிறார் தாய் கிராஸ் மேரி.



    சிறு சிறு மரக்குச்சிகளைக் கொண்டு உருவங்களை படைக்கும் கலையை உலகத்தில் பலர் செய்தாலும், 3 மில்லிமீட்டர் அளவிலான குச்சிகளைக் கொண்டு உருவாக்கும் ஸ்டிக் ஆர்ட்டை, தான் மட்டுமே செய்து வருவதாக பெருமையுடன் கூறுகிறார் பினு ஷாஜன்.



    மேலும் படிக்க... குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: