டிக்டாக்கில் லைக்ஸ் குவிக்க வளர்த்த பூனையை தூக்கில் தொங்க விட்ட இளைஞர் கைது

டிக்டாக் லைக்ஸ்களுக்கு ஆசைப்ட்ட வாலிபர் தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்டாக்கில் லைக்ஸ் குவிக்க வளர்த்த பூனையை தூக்கில் தொங்க விட்ட இளைஞர் கைது
கைதான இளைஞர்
  • Share this:
நெல்லையில் டிக்டாக்கில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு செல்லமாக வளர்த்த பூனையை தூக்கில் தொங்க விட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் சுயம்பு. அவரது மகன் தங்கராஜ், தந்தையின் மாட்டுப்பண்ணை தொழிலில் அவருக்கு உதவியாக பணிபுரிந்து வருகிறார்.

தாங்கள் வளர்க்கும் மாடுகளோடு டிக்டாக் வீடியோ எடுத்து அதனை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அதில் அவர் எதிர்பாா்த்த  லைக்குகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கடற்கரைக்கு சென்று படகு மேல் நின்று வடிவேலு காமெடிக்கு டிக்டாக் செய்துள்ளார். எனினும் அவர் ஆசை நிறைவேறவில்லை.


அதிக லைக்ஸ்களை பெற ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தங்கராஜ்-க்கு அதிகரித்து வண்ணம் இருந்துள்ளது. இந்த நிலையில் தான்  செல்லமாக வளா்த்த பூனையை தூக்கில் தொங்க விட்டு அதனை டிக்டாக்கில் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில் அதற்கு லைக்குகள் அதிகளவில் விழுந்துள்ளது.

இந்த டிக்டாக் வீடியோ காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கவே அவர் மீது பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். டிக்டாக் லைக்ஸ்களுக்கு ஆசைப்ட்ட வாலிபர் தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading