• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நண்பருக்கு உதவ வாங்கிய கடனை திருப்ப கொடுக்கமுடியாததால் இளைஞர் தீக்குளிப்பு

நண்பருக்கு உதவ வாங்கிய கடனை திருப்ப கொடுக்கமுடியாததால் இளைஞர் தீக்குளிப்பு

Youtube Video

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நண்பர் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், பாதிக்கப்பட்ட நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  • Share this:
    ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்தவர் 30 வயதான பிரசன்னா. இவர் அரிசிக் கடை நடத்தி வந்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு தெரிந்தவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். கடனை வாங்கிய நண்பர், மாதம் 10,000 ரூபாய் வீதம் 3 மாதங்கள் வட்டி செலுத்தியுள்ளார். அதன்பின் வட்டி கொடுக்கவில்லை. அதனால் கடன் கொடுத்தவர், பிரசன்னாவுக்கு நெருக்கடி கொடுக்கவே, பிரசன்னா தன் கையில் இருந்த பணத்தைக் கொடுத்து சமாளித்துள்ளார்.

    அப்போதும் நண்பர், பிரசன்னாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் பிரசன்னாவால் வட்டி கொடுக்க முடியாத நிலையில் கடன் கொடுத்தவரின் நெருக்கடி அதிகரித்துள்ளது. நெருக்கடியைத் தாங்க முடியாத பிரசன்னா. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.

    ஐந்து முனை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு காக்காத் தோப்பு பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையோரம் சென்றுள்ளார். அங்கு தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளர். தீ மளமளவென பற்றவே அங்கும் இங்கும் ஓடியுள்ளார்.

    பின்னர், வலி தாங்க முடியாமல் அருகில் கிடந்த தண்ணீரில் விழுந்து தீயை அணைத்துக் கொண்டார். தொடர்ந்து தனது செல்போன் மூலம் போலீசாருக்குத் தகவல் அளித்து தன்னைக் காப்பாற்றும்படி கதறியுள்ளார். எமனேஸ்வரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

    மேலும் படிக்க...பாஜக பெண் பிரமுகர் பாலியல் புகார் - பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ

    அதில், தனது நண்பருக்காக வாங்கிக் கொடுத்த கடனால் ஏற்பட்ட பிரச்னை குறித்து கூறியுள்ளார். பிரசன்னாவை பரமக்குடி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை காலை பிரசன்னா உயிரிழந்தார். இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என எமனேஸ்வரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    -------------------------------------------------------------------------------------------

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: