சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை..

Youtube Video

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 • Share this:


  விழுப்புரம் மாவட்டம், அதனூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், பெரம்பூரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி, தனியார் வங்கியின் கலெக்சன் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதிக நேரம் ரம்மி விளையாட்டிலேயே மூழ்கி கிடந்ததாகவும், அதில் பணத்தை இழந்ததால் சொந்த ஊருக்குகூட செல்லாமல் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.

  இந்நிலையில் நேற்றிரவு குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அறையில் இருந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் குமரேசனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க...திமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..  சமீபகாலமாக ஆன்லைனில் ரம்மி, பப்ஜி போன்ற விளையாட்டுகளை விளையாடும் மாணவர்களும் இளைஞர்களும் தற்கொலை செய்துக்கொண்டு வருகின்றனர்.

  இதற்கு மன அழுத்தம்தான் காரணமா?  இது போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் தடை குறித்து தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? தொடர்ச்சியாக நடக்கும் இந்த தற்கொலைகளை தடுக்க என்னதான் வழி? என்பதே பெற்றோர்களின் கேள்வியாக உள்ளது.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Vaijayanthi S
  First published: