தேனியில் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவரை கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞர் கைது..

Youtube Video

தேனி மாவட்டத்தில் 70 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தன் பாலின ஈர்ப்பால் இளைஞர் ஒருவர் முதியவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இளைஞர் சிக்கியது எப்படி?

 • Share this:


  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 70 வயதான முதியவர் பொன்ராம், திடீரென உயிரிழந்த விவகாரத்தில், 26 வயதான இளைஞர் அருண்குமார் சிக்கியுள்ளார். மதுபோதையில் தன்பாலின ஈர்ப்பு ஆசை கொலையில் முடிந்தது.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான முதியவர் பொன்ராம். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். அவரது ஆடை கலைந்திருந்ததால் சந்தேகமடைந்த மகள் மாரியம்மாள், தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

  அதன் அடிப்படையில் முதியவரின் உடல் தேனி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் முதியவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வோர் பற்றி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி 26 வயதான அருண்குமார் சிக்கினார்.

  அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது தான்தான் முதியவரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அருண்குமாரும் அவரது நண்பர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் முதியவரின் வீட்டருகில் அடிக்கடி தனிமையில் இருப்பது வழக்கம். நண்பருக்குத் திருமணமான நிலையில் அருண்குமார் தவித்து வந்துள்ளார்.

  அதிமுக பொதுக்குழு கூட்டம்- விரைவில் தேதி அறிவிப்பு

  இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் மதுபோதையில், முதியவர் வீட்டுப் பக்கம் சென்ற அருண்குமார், முதியவரிடம் தவறாக நடக்க முயன்றார். முதியவர் பொன்ராம் அப்போது கத்தியதால் பயத்தில் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்துள்ளார் அருண்குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

  இதையடுத்து அருண்குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: