சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது

புதுக்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாக, மூன்று பிரிவுகளின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 2, 2020, 10:37 PM IST
  • Share this:
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின் போது, புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தேசியக் கொடியை எரிப்பது போன்ற படத்தையும் சுதந்திர தின விழாவைப் புறக்கணிப்போம் என்ற வாசகத்தையும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழர் கழகம் என்ற அமைப்பில் இவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Also read: ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் மோட்டார் சைக்கிளை வடிவமைத்த கிராமபுற மாணவர்

இதுகுறித்து காமராஜ் என்பவர் புகாரளித்ததன் அடிப்படையில், கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து மணிகண்டன் என்பவரைக் கைது செய்தனர்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading