• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 500 பெண்களிடம் பாலியல் சீண்டல்.. பகீர் வாக்குமூலம்.. கொடூர இளைஞன் சிக்கியது எப்படி?

500 பெண்களிடம் பாலியல் சீண்டல்.. பகீர் வாக்குமூலம்.. கொடூர இளைஞன் சிக்கியது எப்படி?

Youtube Video

சென்னையில் சாலையில் செல்லும் பெண்களுக்கு பாலியல் சீண்டல் செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான இளைஞர் 500 பெண்களுக்கு மேல் பாலியல் சீண்டல் செய்துள்ளதாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் நடந்தது என்ன?

  • Share this:
    கலெக்சன் எஜென்டான 21 வயதான சரண், தான் கலெக்சன் வேலையை பார்க்காமல் சாலையில் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்து தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். சாலையில் செல்லும் பெண்களிடம் சீண்டல்களை செய்தவர் சிக்கியது எப்படி?

    சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வரக்கூடிய 20 வயது இளம்பெண் ஒருவர் வேலையை முடித்து விட்டு,சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார். பதற்றமடைந்த பெண் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

    சிசிடிவி காட்சியில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவுஎண்ணை வைத்து விசாரணையை செய்ததில் , பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த 21 வயதான சரண் என்பவரை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 21 வயதான சரண் பூந்தமல்லியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். பணம் வசூலிப்பதற்காக சரண் சென்னையில் பல இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்வார்.

    அப்போது சாலையில் தனிமையில் செல்லும் பெண்களை குறிவைக்கும் சரண், பெண்களை வழிமறித்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்படும் பெண்கள் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லவும் ,புகார் அளிக்கவும் தயங்குவதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சரண், பெண்களிடம் அத்துமீறி பாலியல் சீண்டல்களை தொடர்ந்துள்ளார்.

    கடந்த இரண்டு வருடங்களாக 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், நாளொன்றுக்கு 2 இளம்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சரண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    சரண் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் படிக்க....  நகைக்கடன் ரத்து குறித்து இதுவரை அரசாணை வெளியாகாதது ஏன்? செல்லூர் ராஜூ காட்டமான பதில்

    இதுபோன்று பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் அச்சப்படாமல் புகாரளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தும் போலீசார், காவல்துறையின் காவலன் ஆப் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே போலீசாரின் உதவியை நாடலாம் என்கின்றனர். புகார் தெரிவிக்கும் பெண்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: