உலகின் இளம் செஃப் யஷ்வந்த்! - ஜெர்மனியில் பதக்கங்களை குவித்த சென்னை சிறுவன்!

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த யஷ்வந்த் ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் கலைஞர்களுக்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் 4 வெள்ளிப் பதக்கம்

உலகின் இளம் செஃப் யஷ்வந்த்! -  ஜெர்மனியில் பதக்கங்களை குவித்த சென்னை சிறுவன்!
யஷ்வந்த்
  • Share this:
ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் கலைஞர்களுக்கான  களினெரி ஆர்டிஸ்டிக்  ஒலிம்பிக் போட்டியில் சென்னையை சேர்ந்த இளம் செப் யஷ்வந்த் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

ஜெர்மனியில் சமையல் கலைஞர்களுக்கான களினெரி ஆர்டிஸ்டிக் (culinary artistic) ஒலிம்பிக் போட்டி கடந்த 14 - 19 தேதிகளில் நடைபெற்றது. இதில் உலகெங்கும் இருந்து 70 நாடுகளை சேர்ந்த 2000 சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். இவர்களோடு சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 16 வயது யஷ்வந்த் குமாரும் பங்கேற்றார்.

இந்த போட்டியில் பங்கேற்கும் ஒரே இந்தியர் என்ற பெருமையோடு அங்கு சென்ற அவருக்கு இன்னும் பல பெருமைகள் காத்திருந்தன. வெஜிடபிள் கார்விங், பேஸ்ட்டி ஆர்ட்டிஸ்டிக் என்ற இரு பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற யஷ்வந்த் மிக சிறப்பான படைப்புகளை செய்து அசத்தி இரண்டு பிரிவுகளிலும் தலா இரண்டு என மொத்தம் நான்கு வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.


இந்த போட்டியில் வென்றதன் மூலம் உலகின் இளம் செஃப் என்ற பெருமையும் பெற்று இந்தியா திரும்பிய அவருக்கு, இன்று சென்னையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் தென்னிந்திய சமையல் கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், கூட்டமைப்பின் தலைவர் தாமோதரன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அப்போது பேசிய யஷ்வந்த், "சமையல் கலையின் மீது எனக்கிருந்த ஆர்வத்தால், வீட்டிலிருந்தே பல உத்திகளை என் அப்பாவின் உதவியுடன் கற்றுக் கொண்டேன். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்த கையோடு இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன்." என்று தெரிவித்தார்.
First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading